தேர்தல் விழிப்பு உணர்வா... அ.தி.மு.க-வுக்கு ஆதரவா?

மதுரை கலெக்டர் மீது விமர்சனம்!

ருகின்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை நடத்திக்காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல மாவட்ட ஆட்சியர்களும் இதை ஃபாலோ பண்ணி கலக்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் புதுப்புது ஐடியாக்களைப் பயன்படுத்தி எல்லோரையும் அவர் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் மற்ற மாவட்ட கலெக்டர்கள் போல சைக்கிள் ஊர்வலம், கல்லூரிக் கருத்தரங்கம் என்று வழக்கமான விழிப்பு உணர்வுப் பிரசாரத்தை ஆரம்பித்த கலெக்டர், பிறகு மக்களை ஈர்க்கும் வகையில் செயல்படத் தொடங்கினார்.

திடீரென்று ஓர் ஊருக்குச் செல்வது, அங்குள்ள வீடுகளில் வாக்காளர் அடையாள அட்டை வந்துவிட்டதா என்று அரசு ஊழியர்போல சாதாரணமாகக் கேட்பது, வந்துவிட்டால் அதிலுள்ள பெயர்கள் உண்மையா என்று கிராஸ் செக் பண்ணுவது, வரவில்லை என்றால் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்வது என்பதில் தீவிரம் காட்டினார். ‘‘காசு வாங்கிக்கொண்டு வாக்களிக்கக் கூடாது. தேர்தல் அன்று கண்டிப்பாக வாக்களிக்கச் செல்ல வேண்டும். யாராவது பணமோ, பரிசுப் பொருளோ கொடுத்தால் இந்த எண்ணுக்குத் தகவல் சொல்லுங்கள்’’ என்று கூறிவிட்டுச் செல்வார். அதற்குப் பிறகுதான் வந்தவர் கலெக்டர் என்ற விவரம் வீட்டுக்காரர்களுக்குத் தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்