மிஸ்டர் கழுகு: கறார் காட்டிய ஸ்டாலின் - கம்பி நீட்டிய விஜயகாந்த்!

45-க்கு மேல் தர முடியாது...

“‘நானே ராஜா நானே மந்திரி’ என தன் படத்தின் டைட்டிலைப் போலவே கூட்டணிக்கு ராஜாவாகிவிட்டார் விஜயகாந்த். முதல் மந்திரி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார்’’ என்றபடியே என்ட்ரி ஆன கழுகார், டேபிளில் இருந்த தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி மேட்டரைப் படித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

‘‘ ‘பழம் நழுவிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் பாலில் விழும்’ என்றார் கருணாநிதி. ‘பழம் பாலில் விழுந்தாலும் சரி... காலில் விழுந்தாலும் சரி’ என தமிழிசை ரைமிங் பாடினார். விஜயகாந்த்தோ தனித்துப் போட்டி எனச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாலும்கூட விஜயகாந்த்தை சுற்றியே அரசியல் நகர்ந்து கொண்டிருந்தது. விஜயகாந்த் கூட்டணிக்கு வருவார் என கருணாநிதி சொல்லிக் கொண்டே இருந்தார். பி.ஜே.பி பக்கம் போவாரா... மக்கள் நலக் கூட்டணியோடு சேருவாரா என பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியோடு கை குலுக்கிவிட்டார். பி.ஜே.பி., மக்கள் நலக் கூட்டணி கட்சிகளோடு வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்தியது போல, தி.மு.க-வோடு விஜயகாந்த் பேச்சு வார்த்தைகள் நடத்தவில்லை. அதேநேரத்தில் இரண்டு தரப்பும் மறைமுகமாகப் பேசிக்கொண்டுதான் இருந்தன.’’

‘‘ம்.’’

‘‘தொகுதி ஒதுக்கீட்டில் காட்டிய பிடிவாதம்தான் தி.மு.க-வோடு சேராமல் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க சேர்ந்தது. தேர்தல் ஜுரம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தி.மு.க., தே.மு.தி.க தொண்டர்கள் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாகக் கருணாநிதியை அவரது வீட்டில் விஜயகாந்த் சந்தித்த பிறகு தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணையும் என்கிற நம்பிக்கை பலமாக எழுந்தது. சட்டசபையில் தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் அனுமதிக்கப்படாமல் இருந்ததையும் தி.மு.க கண்டித்தது. இதனால் இரண்டு கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் மனதளவில் ஒன்றிப் போயிருந்தார்கள். கிட்டத்தட்ட தேர்தல் வேலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். விஜயகாந்த் மைத்துனர் சுதீஷும்கூட அதே மூடில் இருந்தாராம். ஆனால், பிரேமலதா மட்டும் தி.மு.க-வோடு கூட்டணி வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார்.’’

‘‘ஓஹோ?’’

‘‘காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்ட அன்றுகூட கருத்துச் சொன்ன பிரேமலதா, ‘இந்தக் கூட்டணி பற்றிச் சமூக வலைதளங்களில் பாதகமான கருத்துக்கள் வருகின்றன’ என நெகட்டிவாக கருத்துச் சொன்னார். ஆனாலும்கூட தி.மு.க தொடர்ந்து முயற்சித்து வந்தது. தி.மு.க-வின் தூதுவர்களாகச் செயல்பட்ட வர்களின் விஷயத்திலேயும் விஜயகாந்த் முகம் சுளித்தாராம். ஸ்டாலின் மருமகன் சபரீசன் போன்றவர்கள்தான் பேச்சுவார்த்தைக்குப் போயிருக் கிறார்கள். ‘தி.மு.க-வின் சீனியர்கள் பலர் இருக்க  இந்த ஜூனியர்களுக்கு என்ன அரசியல் வரலாறு தெரியும்?’ என விஜயகாந்த் வருத்தப்பட்டி ருக்கிறார். ஆனாலும் பேச்சுவார்த்தை இருதரப்பிலும் நடத்தப்பட்டிருக்கிறது.’’

‘‘பின்னணியைச் சொல்லும்.”

‘‘கடந்த அ.தி.மு.க கூட்டணியில் 41 இடங்கள் தரப்பட்டன. இப்போது 45 இடங்கள் தருவதாக தி.மு.க தரப்புச் சொல்லியிருக்கிறது. ‘45-க்கும் மேல் தரமுடியாது’ என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதைத்தான் மீடியேட்டர்கள் விஜயகாந்த் தரப்பிடம் சொல்லியிருக்கிறார்கள். கடந்த தேர்தலைவிட அதிக இடங்கள்தான், ஒப்புக்கொள்ளுங்கள் என விஜயகாந்த்திடம் சொல்லி இருக்கிறார்கள். ‘கடந்த தேர்தலில் காங்கிரஸுக்கே 63 சீட் கொடுத்த தி.மு.க ஏன் அந்த அளவுக்காவது எங்களுக்குக் கொடுக்க முடியாதா? காங்கிரஸைவிட நாங்கள் எந்தவகையில் குறைந்தவர்கள்’ என்று டென்ஷன் ஆனாராம் விஜயகாந்த். அதற்கு தி.மு.க தரப்பில் இருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம். ‘பெரிய வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை ஒதுக்கினீர்கள். இதற்காகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது கடைசியாக 58 இடங்கள் வரை தர தி.மு.க ஒப்புக்கொண்டு அதற்கு மேல் தர முடியாது என காங்கிரஸிடம் கறார் காட்டினீர்கள். அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து தி.மு.க விலகப் போவதாக அறிவித்தது. தி.மு.க அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களைத் தரப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் 63 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கி சரண்டர் ஆனது தி.மு.க. அந்த அளவுக்கு நாங்கள் கறார் காட்டவில்லை. 59 சீட்கள் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்’ என விஜயகாந்த் தரப்பு பதில் அனுப்பியது.’’

‘‘ம்.’’

‘‘இப்படி பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருந்தபோது இடையில் பழ.கருப்பையாகூட பேட்சிங் செய்ய ஒரு முயற்சியில் இறங்கினார். அதே நேரத்தில், விஜயகாந்த் வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கேள்விப்பட்ட ஸ்டாலின் முகம்சுளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்