நல்லவர்களே கிடைக்கவில்லையா?

அ.தி.மு.க-வுக்குள் அதகளம்

அ .தி.மு.க-வில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும், புதுமுகங்களுக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்திருக்கிறது.  ஏராளமானோர் சீட் கேட்டு விருப்ப மனுக்கள் கொடுத்து இருந்தாலும் தகுதி வாய்ந்தவர்கள் என்று சலித்தெடுத்து நேர் காணலுக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பட்டியலை அனுப்பி இருக்கி றார்கள். அந்தப் பட்டியலிலும் வில்லங்கம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். நேர்காணலுக்கு செலக்ட் ஆனவர்கள் மீதான புகார்கள் இதோ.

வேலூர் மாவட்டத்தில் நேர்காணல் பட்டியலில் இருந்தவர்களில் பலர், வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான வீரமணிக்கு நெருக்கமானவர்கள். இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணியின் எதிர்க் கோஷ்டி, ‘யார் யாரிடம் ஆதாயம் பெற்று இந்தப் பெயர்களை வீரமணி பரிந்துரை செய்துள்ளார்’ எனக் கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பிவிட்டார்கள். இதனால் நேர்காணல் நிறுத்தப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்