பெரியோர்களே... தாய்மார்களே! - 75

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

‘‘என் வீட்டில் ஒரு திருடன் திடீரென புகுந்துவிட்டால், அவனை அடிக்க எந்தத் தடி அகப்பட்டாலும் அதை எடுத்து அடிப்பேன். அப்போது சுதந்திரா தடியென்றோ, கம்யூனிஸ்ட் தடியென்றோ பார்க்க மாட்டேன். எல்லாத் தடிகளையும் உபயோகிப்பேன். காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக மற்ற கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொள்வது தவறாகாது. கொள்கையில் பற்றும், லட்சியத்தில் வலுவும் இருப்பவர்கள் யாருடன் சேர்ந்தாலும் அழிந்துவிட மாட்டார்கள். இதில் எனக்குத் துணிவும் நம்பிக்கையும் இருந்து வருகிறது'' - இது அண்ணா சொன்னது. அவர் முதன்முதலாகக் கூட்டணிக் குழம்பு வைத்தபோது சொன்னது.

‘‘காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே ஒரு லட்சியத்துடன் யாரும் எங்களோடு வரலாம், அவர்கள் எங்களோடு உடன்பாடான கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம், எதிர் கொள்கை கொண்டவர்களாகவும் இருக்கலாம்’’ என்று அண்ணா அன்று போட்டுக்கொடுத்த சூத்திரம்தான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.

திராவிட தேசியம் பேசிய அண்ணாவின் தலைமையை தமிழ்த் தேசியம் பேசிய ம.பொ.சி-யும் ஏற்றுக்கொண்டார். நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனாரும் ஏற்றுக்கொண்டார். ‘‘திராவிட நாட்டைக் கைவிட்டு விட்டு மாநில சுயாட்சிக் கோரிக்கையின் பக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் வந்துவிட்டது. எங்களுக்குள் ஏற்பட்ட உறவானது தொகுதி உடன்பாட்டை ஒட்டியது மட்டுமல்ல, கொள்கை உடன்பாட்டையும் ஒட்டியதாகும்'' என்றார் ம.பொ.சி. திராவிடன், தமிழன் என்று பேசுவதே இனவாதம் என்று சொல்லக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கூட்டணியில் இருந்தது. ‘‘என்னுடைய முதல் எதிரி கம்யூனிஸ்ட் கட்சிதான்'' என்று சொல்லிக்கொண்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் இதே அணியில் இருந்தது. வகுப்புவாதத்தை எதிர்க்கக்கூடிய கட்சிகள் இருந்த இந்தக் கூட்டணியில் முஸ்லிம் லீக்கும் இருந்தது. பொருந்தாப் பாத்திரங்கள் அனைத்தையும் வைத்து சமையல் செய்த அண்ணா, இதற்கு கூட்டணி என்று பெயர் வைக்காமல் ‘கூட்டுறவு' என்று சொல்லிக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்