‘ஃபிலிம் நியூஸ்’ஆனந்தனின் ஆசை... நிறைவேற்றாத ஜெயலலிதா!

தென்னிந்திய திரைத்துறைத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்த ‘நடமாடும் விக்கிப்பீடியா’ ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். அப்போது முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘2002-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் சேகரித்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற சேகரிப்புகளை வாங்கிப் பாதுகாத்திட 10 லட்சம் ரூபாய் வழங்கியது’’ எனச் சொல்லியிருந்தார். ஆனால், அவர் சொல்லாத செய்தியும் இதில் இருக்கிறது. ‘ஆனந்தன் சேகரிப்புகளைக் கொண்டு நிரந்தர கண்காட்சியை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது’ என 2002 நவம்பர் 21-ம் தேதி சொல்லியிருந்தார்கள். ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் சொல்லப்பட்ட இந்த விஷயம், இந்த ஆட்சியிலும் நிறைவேறவில்லை.

திரைப்படம் மெளன மொழியாக இருந்ததில் தொடங்கி, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ரிலீஸாகும் படங்கள் வரை வெளியான ஆண்டு, மாதம், தேதி, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற தகவல்களை ஆனந்தன் சேகரித்து வைத்திருந்தார். படத்தின் விளம்பரங்கள், பட அறிவிப்புகள், கேசட் வெளியீட்டு விழா, படம் ஓடிய நாட்கள் உள்ளிட்ட திரை உலகின் ஆவணங்களையும் பாதுகாத்து வைத்திருந்தார். சினிமா மீதான காதலும், ஆர்வமும் அவரது இறுதி மூச்சுவரை நீடித்தது. தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ., பத்திரிகையாளர், புகைப்படக் கலைஞர், கண்காட்சி அமைப்பாளர் என்று பன்முகத் திறமைக்குச் சொந்தக்காரர் ஆனந்தன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்