தடுத்து நிறுத்தப்பட்ட ஆணவக்கொலை

ளவரசன், கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டை சங்கர் என சாதிவெறியின் கோரத்தாண்டவம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இதோ இப்போது வினோத், பிரியங்கா ஜோடிக்கு அதேபோன்ற ஆபத்து. கடைசி நேரத்தில் இ்வர்கள் இருவரும் காப்பாற்றப்​பட்டி​ருப்பதுதான் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வினோத் - பிரியங்கா இருவரும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் வீட்டில் தெரியவர, பிரச்னை வெடித்தது. பிரியங்கா கல்லூரிச் செல்வதற்கு தடை விதிக்கப் பட்டது. அவசர அவசரமாக அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமணத்துக்கு பிரியங்கா மறுப்புத் தெரிவித்துள்ளார். அப்போது பிரியங்காவை  அவரின் பெற்றோர் கட்டையால் பலமாக அடித்துத் துன்புறுத்தி, திருமணத்துக்கு சம்மதிக்கும்படி வற்புறுத்தினர். பலமாக தாக்கப்பட்டதில் தலை முதல் கால் வரை வீங்கி எழுந்து நடக்க முடியாமல் போனார் பிரியங்கா.
ஆனாலும் பிரியங்காவின் காதல் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. அவர், தனி அறையில் அடைக்கப்பட்டார். தந்தை துரைசாமி மற்றும் பிரியங்காவின் அக்கா கணவர் ஆகியோர் இவரை கௌரவக் கொலை செய்ய போவதாக தகவல் பரவியது. தன் பெற்றோரே சாதியின் பேரால் தன்னைக் கொலை செய்யப்போவதை அறிந்துகொண்ட பிரியங்கா மனம் உடைந்துபோனார். உடல், மனவலியோடு வினோத்துக்குக் குறுஞ்செய்தி அனுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்