“இரண்டு தலைமுறைகளை முடமாக்கிய அரசுகள்!”

‘நம் விரல்... நம் குரல்’ கருத்தரங்கு!

விகடன் குழுமம் சார்பில் ‘நம் விரல்... நம் குரல்’ கருத்தரங்கு நிகழ்ச்சி ஈரோட்டில் மாணவர்களின் விவாத நிகழ்ச்சியாக நடந்தது. ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுவிலக்கு குறித்து மாணவர்கள் விவாதித்தனர்.

    அண்ணா வழி நடக்கிறார்களா?

“சுதந்திரத்துக்குப் பின்னர் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்தபோது ஏற்படாத ஞானம் திடீரென்று ஏற்பட என்ன காரணம்? மதுவிலக்குப் பற்றிப் பேசினால் மக்களிடம் ஓட்டுக்களை அள்ள முடியும் என்ற எண்ணம் இப்போது அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகிறது. அண்ணா ஆட்சிக்காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டம் வந்தது. அவர் நினைத்திருந்தால், மதுவிலக்கை தடை செய்து அதில் வரும் வருமானத்தில் அந்தத் திட்டத்தை அமல்படுத்தி இருக்க முடியும். மக்களைக் குடிபோதைக்கு ஆளாக்கித் திட்டத்தைச் செயல்படுத்த அவர் விரும்பவில்லை. அண்ணாவைப் பின்பற்றி ஆட்சி செய்கிறோம் என்று சொல்லும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இந்த எண்ணத்தோடு செயல்படவில்லை” என்றார் ஒரு மாணவர்.

“ஒட்டுமொத்தமாக மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமற்ற ஒன்று. மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்குத் தொடுத்து கைது செய்துள்ளனர். ஆட்சியைப் பிடிப்பதற்காக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொல்வது நியாயம் ஆகுமா? தி.மு.க ஐந்து முறை ஆட்சியில் இருந்துள்ளது. அப்போதெல்லாம் மதுவிலக்கை அமல்படுத்தவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் எலைட் பார்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டு கட்சிகளாலும் மதுவிலக்கைத் தடை செய்ய முடியாது” என்றார் மாணவி ஒருவர்.

“ராஜாஜி காலத்தில் மதுவிலக்கு இருந்தது. நிதிப் பற்றாக்குறையால் தி.மு.க ஆட்சியில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா அமைதியாக இருப்பதற்கும் நிதிப் பற்றாக்குறைதான் முக்கியக் காரணம். டாஸ்மாக் கடைகள் மூலம்தான் வருமானம் அதிகரிக்கிறது. மதுவைத் தடை செய்வோம் என வாக்குறுதிகள் கொடுக்கும் கட்சிகள், டாஸ்மாக் மூடப்பட்டால் ஏற்படும் நஷ்டத்தை எப்படிச் சாமாளிக்கப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. தேர்தல் வாக்குறுதிகளில், டாஸ்மாக் மட்டும் மூடப்படுமா இல்லை, மதுத் தொழிற்சாலைகளும் மூடப்படுமா என்பது குறித்து எந்தத் தெளிவான அறிவிப்பும் இல்லை. இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளில் குழப்பங்களே அதிகமாக உள்ளன” என்றார் இன்னொரு மாணவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்