“மாம்பழமும் பம்பரமும் வாங்கித் தந்தது அம்மா!”

விளாசுகிறார் வையாபுரி

தீவிர பிரசாரத்தில் இருந்த அ.தி.மு.க-வின் நட்சத்திர பேச்சாளரும், நகைச்சுவை நடிகருமான வையாபுரியை நாகர்கோவிலில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அ.தி.மு.க திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்திருக்கின்றன?’’

‘‘அம்மாவோட திட்டங்கள் மக்களை முழுசா சென்றடைந்துள்ளன. பசி இல்லை, பஞ்சம் இல்லை. பிச்சைக்காரங்க முன்னாடி எல்லாம் வீட்டு முன்னால், ‘அம்மா தாயே... சோறு போடுங்க’ எனச் சொல்வாங்க. இப்போ, அம்மா ஆட்சியில் வறுமை இல்லை. பிச்சைக்காரங்களும் அப்படி பிச்சை கேட்கலை. 2016-லும் மக்கள் மாற்றத்தை விரும்பலை. அம்மா ஆட்சி தொடரவே விரும்புறாங்க.’’

‘‘தி.மு.க - அ.தி.மு.க என்கிற இரு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க - ம.ந.கூ., த.மா.கா அணி வந்துள்ளது. இது எப்படி இருக்கு?’’

‘‘அது மாற்று அணி அல்ல... காமெடி கூட்டணி. விஜயகாந்த் வரலைனா அந்தப் பொறுப்பு வைகோவுக்குப் போயிரும். வைகோவும் விஜயகாந்த்போல கோபப்படுவாரு. ஆட்சி அமைக்குறதுக்குள்ளேயே அமைச்சரவை அமைச்சாச்சி. இந்தக் கூட்டணி கடைசிவரை நிலைக்காது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்