“நடந்துகொண்டிருப்பது ஆட்சி அல்ல... கண்காட்சி!”

கருணாநிதி வேதனை

 

யது, 92. ஆனால், தேர்தல் உற்சாகத்தில் தள்ளாத வயதிலும் வாக்காளர்களைச் சந்திக்கப் பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

கடந்த 23-ம் தேதி சென்னையில் தன்னுடைய தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார். சைதாப்பேட்டை, மரக்காணத்தை முடித்துவிட்டு, அன்று இரவு புதுச்சேரி வந்தார். மாலை ஐந்து மணிக்கெல்லாம் கருணாநிதி வந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது. அதனால், மாலை நான்கு மணிக்கே பாண்டி அண்ணா திடலில் கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சிக்காரர்களும் குவிந்தனர்.

ஆட்சியாளர்களின் வாய்சவடால்

இரவு 9.30-க்கு மேடைக்கு வந்தார் கருணாநிதி. அவரைப் பார்க்கும் ஆவலில் திடலுக்கு வெளியில் கூடியிருந்தவர்கள் கூட்டமாக உள்ளே நுழைந்தார்கள். அவர்களை போலீஸார் பெரும் சிரமப்பட்டுச் சமாளித்தனர். அப்போது, போலீஸாரிடம் தொண்டர் ஒருவர், “அடுத்த வருஷம் நான் உயிரோடு இருப்பேனோ, அல்லது கலைஞர் தேர்தல் பிரசாரத்துக்கு இனிமேல் வருவாரான்னு தெரியாது. அவரை ஒரு தடவை பார்த்திடலாம்னா விடமாட்றீங்க” என்று எகிறினார். நமக்கேன் வம்பு என்று போலீஸ்காரர்கள் நகர்ந்துகொண்டனர். மேடையில் வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்திப் பேசினார். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அப்போது அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் நமச்சிவாயம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்கள். “இந்த மாநிலத்தின் ஆட்சியாளர்கள் வாய்சவடால் பேசிவிட்டு, ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று என்.ஆர். காங்கிரஸ் அரசை வறுத்தெடுத்தார் கருணாநிதி.

“எனக்கு உடல்நிலை சரியில்லை. அதிக நேரம் பேசமுடியாது” என்று தனது பேச்சைச் சுருக்கமாக முடித்துக்கொண்டு ஓய்வெடுக்க ஹோட்டல் அக்கார்டுக்குக் கிளம்பிவிட்டார்.

இளைஞர்கள் நினைத்தால்...


24-ம் தேதி மாலை கடலூர் வந்தார் கருணாநிதி. மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகள். ஒவ்வொரு தொகுதி வேட்பாளரும் குறைந்தது ஐயாயிரம் பேரையாவது கூட்டிவர வேண்டும் என்பது வாய்மொழி உத்தரவு. அங்கே நெய்வேலி வேட்பாளர் சபா ராஜேந்திரன் பெயரில் மட்டும் சுமார் 150 வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்திருந்தார்கள். மாலை நேரம் வெயில் குறைந்திருந்த வேளையில் மைக் பிடித்த கருணாநிதி, “தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா கருத்துகளுக்கு மாறாக ஏதோ நடக்கிறது. நாட்டில் கொள்ளையர்கள், வஞ்சகர்கள் பதவிக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டார்கள். அவர்களை வீழ்த்தி நல்ல சூழலை உருவாக்க தி.மு.க பாடுபடுகிறது. நாடு குட்டிச்சுவராகி விடக் கூடாது. இளைஞர்கள் நினைத்தால் ஒருவர் தேர்தலில் வெற்றி பெறமுடியும். ஒருவர் தோற்கடிக்கவும் முடியும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்