ஜெயலலிதா மறைக்கும் வில்லங்கப் பட்டியல்!

5 ஆண்டு சர்ச்சைகள்

‘‘ஐந்து ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்கள் தொடர்ந்திட, தமிழகத்தின் சேவைத் துறை நீடித்திட நீங்கள் மீண்டும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ என்று தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்தோறும் முழங்கிவருகிறார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு ஆட்சியில் விமர்சனங்களின் வில்லங்கப்பட்டியல் இதோ...

விலையில்லா அரிசியில் வில்லங்கம்!

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வரப்பட்ட முதல் திட்டம் ‘ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு விலையில்லா அரிசி’ திட்டம்தான். தமிழகத்தில் உள்ள 1,86,45,214 குடும்ப அட்டைகளுக்கு, மாதம்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவரும், இந்த இலவச அரிசியை வாங்குவதில்லை. அரிசி வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் கணக்கிலும் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு அவை வெளிமாநிலங்களுக்குக் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. “இப்படி கடத்தப்படும் அரிசியின் மதிப்பு மாதம் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய். ஐந்து ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் விலையில்லா அரிசியை விற்று முறைகேடு செய்துள்ளார்கள். இந்தக் கடத்தல் அனைத்தும் துறையின் மேல் மட்டத்துக்கும் தெரியும்” என்ற குற்றச்சாட்டும் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்