“லோக் ஆயுக்தா பல் இல்லாத பாம்பு!”

தேர்தல் அறிக்கைகள் எல்லாம் சும்மா!வெளுத்துக்கட்டும் அறப்போர் இயக்கம்

முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் லோக் ஆயுக்தா சட்டத்தின்படி தண்டிக்க முடியும். இந்த லோக் ஆயுக்தா சட்டம்தான் கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவின் பதவியைப் பறித்து அவரைச் சிறைக்கு அனுப்பியது. வலிமை வாய்ந்த இந்தச் சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வராமல் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் காலம்தாழ்த்தி வந்தன. இப்போது, சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு லோக் ஆயுக்தா கொண்டு வரப்படும் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்திருக்கின்றன. இத்தகைய ஒரு சட்டம் இல்லாததுதான் தமிழகத்தின் ஊழல் ஊற்றுக்கு அடிப்படைக் காரணமாகும். லோக் ஆயுக்தா என்பது 1966-ல் அமைக்கப்பட்ட நிர்வாகமுறைச் சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சட்டம். 2013-ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட லோக்பால் சட்டப்படி அனைத்து மாநில அரசுகளும் லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும். இதைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. தமிழகம், நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் லோக் ஆயுக்தா இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்