படிப்படியாக... ஜெயலலிதா வேட்புமனு ஹைலைட்ஸ்

* மூன்று ஏசி... ஃபால்ஸ்சீலிங்... இஞ்ச் படிக்கட்டுகள் என கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது அவர் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அதே இடத்தில்தான் இப்போது ஜெ. வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

* தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்குப் போக ரோட்டில் இருந்து பிளாட்பாரத்தில் ஏறினால் போதும். ஜெயலலிதா ஏறி வருவதற்காக இரண்டு இஞ்ச் உயரத்தில் மூன்று படிக்கட்டுகள் போட்டிருந்தார்கள். அந்தப் படிக்கட்டுகளின் இருபுறங்களிலும் பிடித்துக்கொண்டு ஏறி வருவதற்காக எவர்சில்வரில் புத்தம் புது தடுப்புக் கம்பிகள் வேறு அமைத்திருந்தனர். அதைத்தான் இப்போது ஜெயலலிதா பயன்படுத்தினார். அந்தப் படிக்கட்டுகளில் ஏறும்போது கைப்பிடிகளைப் பிடித்தபடியே வந்தார். காரில் ஏறும் போதும்கூட சிறிய படிக்கட்டு மேடையில் கால் வைத்துதான் ஏறினார்.

* தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில்தான் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதன் முகவரி எண் 821. ஆர்.கே.நகர் தொகுதியின் வரிசை எண் 11. இதன் கூட்டுத் தொகைகள் 2.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்