பெரியோர்களே... தாய்மார்களே! - 84

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

மிழ்நாடு சட்டமன்றத்தைத் தரை டிக்கெட்டுக்கு இறக்கியதில் பெரும் பங்கு ஜெயலலிதாவுக்கு உண்டு. அதற்கு முன் ஆண்ட எம்.ஜி.ஆர் சபைக்கு சரியாக வராமல் இருந்திருக்கலாம். விவாதங்களில் பங்கெடுக்க ஆர்வம் இல்லாதவராகவும் இருந்திருக்கலாம். அதற்கும் முன்னால் ஆண்ட கருணாநிதி, தனது பேச்சுமன்றமாக சபையைப் பயன்படுத்தி இருக்கலாம். கருணாநிதியின் புகழ்பாடும் மண்டபமாக மாற்றி இருக்கலாம். கருணாநிதிக்கு 50 ஆண்டு கால சட்டமன்றப் பொன்விழா என்பதை தமிழ்நாடு சட்டமன்றத்தின் மைய மண்டபத்துக்குள்தான் கொண்டாட வேண்டுமா? அதற்கு வரமறுத்தார் அப்துல்கலாம் என்பதற்காக, கனவு நாயகனை கருணாநிதி அடித்த கிண்டல்கள் மறக்கக் கூடியதா? ஆனால், இந்த வரிசையில் எம்.ஜி.ஆரையும் கருணாநிதியையும் ஓவர் டேக் செய்தது மட்டுமல்ல, ஓவராக ஆடியும் ஓடியும்விட்டார் ஜெயலலிதா.

அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அ.தி.மு.க தலைமைக் கழகம்போல முழுக்க முழுக்க ஆகிவிட்டது தமிழ்நாடு சட்டமன்றம். தலைமைக் கழகத்தில் தட்டுவதற்கு இத்தனை மேஜைகள் இல்லை. ஆனால், சட்டமன்றத்தில் அதுவும் இருக்கிறது.  ஓங்கி அடிக்க அடிக்க மரத்தின் உரம் ஏறுகிறது. அடிப்பவரின் கையின் நிறம் மாறுகிறது. இதனால் தமிழ்நாடு சட்டமன்றத்தின் தரம் குறைகிறது. சபையின் மறம் மறைகிறது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.

முதல் முறை வந்தபோதில் இருந்தே சபையை சர்ச்சைக்குள் ஆக்கினார் ஜெயலலிதா. 1991 சட்டமன்றத் தேர்தல் வெற்றி என்பது அதுவரை யாரும் அடையாத வெற்றி. தி.மு.க அணியே 2 இடங்களில்தான் வென்றது. அ.தி.மு.க அணியே அனைத்தையும் அள்ளியது.

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வில் இருந்து எஸ்.திருநாவுக்கரசர் என்று ஒன்றிரண்டு பேர் மருந்துக்கு நடமாடினார்கள். தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, பெருத்த தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதால் பரிதாபமாக பரிதி இளம்வழுதி மட்டும்தான் தனித்து இருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்