அரசியல் கட்சிகளின் மெளனம் கலையுமா?

தமிழகத்தின் டாப் 10 சூழலியல் பிரச்னைகள்

ரசியல் கட்சிகள் தம் மக்களை எப்படி கிள்ளுக்கீரையாக நினைக்கின்றன என்பதற்கு பெரும் மழையும், சுட்டெரிக்கும் வெயிலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் நல்ல உதாரணம். ஆம். எந்த அரசியல் கட்சியும் சூழலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதற்கான நிரந்தரத் தீர்வைத் தேட முன்வரவில்லை. இது வெயிலைவிட பெருந்துயரம்.

சரி. தமிழகத்தின் டாப் 10 சூழலியல் பிரச்னைகளை முன்வைப்போம். இதன்பிறகாவது அனைத்து அரசியல் கட்சிகளும் இதைப் பற்றிப் பேசுகின்றனவா,  என்ன தீர்வைச் சொல்கின்றன என்று பார்ப்போம்.

காணாமல்போகும் குளங்கள், குப்பைமேடாக மாறும் ஏரிகள்!


பெரும் சூழலியல் பிரச்னைகள்தான் மக்களின் கவனத்துக்கு வருகின்றன. ஆனால், கண் முன்னால் காணாமல் போய்க் கொண்டிருக்கும் கண்மாய்கள் யாருக்கும் தெரிவதில்லை. அதை மக்களாக மீட்க, புனரமைக்க முன் வரும்போது அரசு கண்டுகொள்வதில்லை, அனுமதி தருவதில்லை. கடந்த ஒரு வருடமாக சேலத்தைச் சேர்ந்த பியுஷ் போராடிக்கொண்டிருக்கிறார். ‘‘பள்ளப்பட்டி ஏரியை நாங்கள் மீட்டுக்கொள்கிறோம்.அதற்கான அனுமதி தாருங்கள்” என்று. ஆனால், இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் மெளனம் சாதிக்கின்றன. கட்சிகள் மெளனம் களைய வேண்டும். இழந்த நீர்நிலைகளை மீட்க, புது நீர்நிலைகளை உண்டாக்க திட்டங்களை முன்மொழிய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்