அனைத்துத் தொகுதிகளிலும்... ‘அம்மா அலை’ வீசுகிறது!

பொன்னையன் உற்சாகம்

“அதிகமான வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்கணும்னு அம்மா ஆசைப்படுகிறாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி நாம எல்லாரும் உழைக்கணும்” என்று சைதாப்பேட்டையில் தனது கட்சியினருக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார், அ.தி.மு.க-வின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் பொன்னையன். அவரைச் சந்தித்தோம்.

“உங்கள் பிரசாரத்தில் எந்த மாதிரியான விஷயங்களை முன்வைக்கிறீர்கள்? அதற்கு, மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?


“தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ‘அம்மா அலை’ வீசுகிறது. அம்மாவின் சக்தி மகத்தான சக்தியாக இருக்கிறது. ஏழைகளுக்கு நல்ல வாழ்வாதாரங் களைத் தர வேண்டும் என்கிற அம்மாவின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அதை, மக்களே நேரடியாக உணர்ந்துள்ளனர். அதனால், எல்லா இடங்களிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது. மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற விலையில்லா நலத்திட்டங்கள்... மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி, மிதிவண்டி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன. இவை எல்லாம் தங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய நன்மை அளிப்பதாக அனைத்துத் தரப்பினரும் சொல்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை, இதயம், கிட்னி தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை பெற 4 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றில் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர். இவை எல்லாம், பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரசாரத்துக்குப் போகும்போது, மாற்றுக்கட்சியினரின் வீட்டுப் பெண்கள்கூட இதையெல்லாம் எங்களிடம் சொல்கிறார்கள். எனவே, மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்பது உறுதியாகி இருக்கிறது”.

“சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, அ.தி.மு.க மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகப் பேசப்படுகிறதே?”


“சென்னையில், ஒரு வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, கடவுளின் அருளால் மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளம், மனித சக்திக்கு அப்பாற்பட்டது. இதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமயத்திலும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு வெள்ளத்தின் பாதிப்பை முதல்வர் அம்மா சீர் செய்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த அதிகாரிகளும், பணியாளர்களும் வெள்ளப்பாதிப்புகளைக் கண்டறிந்து இன்னல்களில் இருந்து மக்களை மீட்டெடுத்தனர். மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், தொற்றுநோய் ஏற்படாதவாறு மருத்துவக்குழுவின் உதவிகள் என தேவையான அனைத்தும் மக்களுக்குச் செய்துதரப்பட்டது. முதலில், சைதாப் பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்தான் என் பிரசாரத்தைத் தொடங்கினேன். வெள்ளப் பாதிப்பு குறித்து, எதிர்க் கட்சிகள் ஏற்படுத்திய பொய்யான பிம்பம் மக்களிடம் எடுபடவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்