கலாட்டா காக்டெய்ல்!

‘கும்பகர்ண’வேட்பாளர்!

திருச்சியில் அ.தி.மு.க-வின் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு அமர்ந்திருந்த திருக்கோயிலூர் தொகுதி வேட்பாளரான சேவல் ஜி.கோதண்டராமன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். இன்னும்
இரண்டு வேட்பாளர்களும் ‘ஆழ்ந்த சிந்தனை’யில்தான் இருக்கிறார்கள்.

படம்: தே.தீட்ஷித்

புளியமரத்தைக் கண்டால் ராமதாஸ் ஞாபகம்...


“வரும் வழியில் நிறையப் புளியமரங்களைப் பார்தேன். புளியமரத்தைப் பார்த்தாலே ராமதாஸ் அய்யாதான் ஞாபகத்துக்கு வருகிறார். ‘இந்தச் சாதிச் சங்கத்தை நான் கட்சியாக மாற்றுகிறபோது, என் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாராவது பொறுப்புக்கு வந்தால், புளியமரத்தில் கட்டிவைத்து என்னை சவுக்கால் அடியுங்கள்’ என்று சொன்னவர் ராமதாஸ். அடிக்கிறதுல நாங்க கில்லாடி. பாட்ஷா படத்துல ரஜினிகாந்த்தையே கட்டி வெச்சுத் தோலை உரிச்சவங்க நாங்க. ராமதாஸ் எல்லாம் சர்வசாதாரணம்.”

(திருவாரூரில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ் பேசியதில் இருந்து)

-த.க.தமிழ் பாரதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்