டிஜிட்டல் தேர்தல்... - சமூக வலைதளத்தில் யார் கில்லி?

ல்கஹாலுக்கு அடிமையானவர் களைவிட ஆண்ட்ராய்டுக்கு ‘அடிக்ட்’ ஆன கூட்டம் அதிகம். (கோவிச்சுக்காதீங்க! ‘ஆ’வுக்கு ‘ஆ’ அவ்வளவுதான்!) டாஸ்மாக் கடைகளைவிட ஸ்மார்ட் போன் கடைகளில்தான் கூட்டம் கும்மிஅடிக்கிறது. குடவோலையில் தொடங்கி, வாக்குச்சீட்டுக்கு மாறி, மின்னணு இயந்திரத்தில் வந்து நிற்கிறது இந்திய ஜனநாயகம். ‘டிஜிட்டல் புரட்சி’ நடந்துகொண்டிருக்கும் காலக்கட்டத்தில், தேர்தலும் டிஜிட்டல் மயமாகிப் போனது. தெருப் பிரசாரம், திண்ணைப் பிரசாரம், வேன் பிரசாரம், பொதுக்கூட்டம் என்ற வடிவம் மாறிப் போய் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பிரசாரமாகப் பரிமாணம் அடைந்திருக்கிறது. டிஜிட்டல் பிரசாரத்தில் யார் கில்லி என்பதை அலசுவோம்.

கட்சிகளின் ஃபேஸ்புக்!

7.66 லட்சம் லைக்குகளுடன் தமிழக பி.ஜே.பி-யின் பேஸ்புக் பக்கம் முதலிடத்தில் இருக்கிறது. 2.09 லட்சம் லைக்குகளுடன் அ.தி.மு.க 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தைப் (37 ஆயிரம் லைக்குகள்) பிடித்திருக்கிறது. தமிழகத்தின் 2-வது பெரிய கட்சியான தி.மு.க (30 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள்) 4-வது இடத்தில் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணி (25 ஆயிரம்), நாம் தமிழர் கட்சி (22 ஆயிரம்), த.மா.கா (15 ஆயிரம்), தே.மு.தி.க (10,349), பா.ம.க (9,957) என அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. செயல்பாடுகளைப் பொறுத்தவரை, மக்கள் நலக் கூட்டணி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 40 பதிவுகளுடன் ஒவ்வொரு பதிவுக்கும் அதிக அளவில் லைக்குகள் கமென்ட்கள் மற்றும் ஷேர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஒரு நாளைக்கு 15 பதிவுகளுடன் நாம் தமிழர் கட்சி உள்ளது. பதிவுகள் அதிக அளவில் லைக்குகள் மற்றும் ஷேர்களைப் பெறுகின்றன. குறிப்பாக கமென்ட்கள் குவிகின்றன. 13 பதிவுகளுடன் மூன்றாவது இடத்தை தமிழக பி.ஜே.பி பிடிக்கிறது. பதிவுகளுக்கு இடையிலான கால இடைவெளி சரியான அளவில் இல்லை. (கட்டத்தொரைக்கு என்னைக்குமே தமிழ்நாட்டுல கட்டம் சரி இல்ல.) ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு சராசரி பதிவுகளுடன் தி.மு.க நான்காவது இடத்தைப்  பிடிக்கிறது. மேலும், பதிவுகளுக்காகச் சரியான அளவு எதிர்வினைகள் இல்லாததுடன் பதிவுகளுக்கு இடையிலான கால இடைவெளிப் பிரச்னையும் இருக்கிறது. நான்கு முதல் ஐந்து சராசரி பதிவுகளுடன், மோசமான எதிர்வினை களுடன் ஆளும் கட்சியான அ.தி.மு.க ஐந்தாவது இடத்தில் உள்ளது. (பேஜ் அட்மின்களை மாற்றுவீர்களா? மாற்றுவீர்களா?) இதற்கு அடுத்ததாக நான்கு சராசரிப் பதிவுகளுடன் தமிழக காங்கிரஸ் ஆறாவது இடத்திலும், ஒரு சராசரிப் பதிவுடன் பா.ம.க-வும், சராசரியே சொல்ல முடியாத அளவுக்குப் பதிவுகள் இல்லாமல் தே.மு.தி.க-வும் அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றன. (அடப் போங்கையா, நீங்க அதுக்குச் சரிபட்டு வர மாட்டீங்க.)

தலைவர்களின் ஃபேஸ்புக்!

முன் எப்போதும் இல்லாத அளவு இந்தத் தேர்தலில் அதிக அளவு கவனம் பெறுவது ஸ்டாலினும் அன்புமணி ராமதாஸும்தான். காரணம் பிராண்டுகளை பூஸ்ட் செய்வது போல இருவரையும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்