திருவாடானை தொகுதி தி.மு.க-வுக்கு சாதகமாகுமா?

வரிசைகட்டும் வி.ஐ.பி வேட்பாளர்கள்

மாவட்டத் தலைநகரான ராமநாதபுரம் தொகுதியை விட அந்த  மாவட்டத்தில்  அமைந்திருக்கும் தொகுதியான திருவாடானை பரபரப்பாகக் காணப்படுகிறது. காரணம், அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள்.

அ.தி.மு.க கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ், தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் சுப.த.திவாகரன் ஆகியோர்  வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக அதன் தலைவர் ஜான் பாண்டியனும் இங்கு போட்டியிடுகிறார். திருவாடானை தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறியிருக்கிறது.

கடந்த முறை போல இந்தமுறையும் கூட்டணிக் கட்சிக்கே தொகுதி ஒதுக்கப்பட்டதால் அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியில் இருந்து  இன்னும் மீளவில்லை. ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கருணாஸ் வெளியூரைச் சேர்ந்தவர். முக்குலத்தோர் சமூகத்தைச் சாராதவர் என எல்லாப் பக்கம் இருந்தும் அவருக்கு  எதிர்ப்புகள் கிளம்பின. கருணாஸை மாற்றக் கோரி மதுரையில் தேவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அ.தி.மு.க-வினரின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்ததால் அவர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் இன்றி உள்ளனர்.

தனக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளருக்கு இத்தனை பாதகங்கள் வரிசைகட்டி நிற்பதைக் கண்ட தி.மு.க வேட்பாளர் திவாகரன் உற்சாகமானார். இந்தத் தொகுதியில் காலம் காலமாக இருந்துவரும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள், கடலோரப் பகுதிகளில்  உள்ள மனித நேய மக்கள் கட்சியின் வாக்குகள், உள்ளூர்க்காரர் என்ற தகுதி, முக்குலத்தோர் சமுதாயத்தினரின்  ஆதரவு, கிறிஸ்தவ சமுதாய வாக்குகள் போன்றவை திவாகரனின் உற்சாகத்துக்குத் துணை சேர்த்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்