ஓட்டு கேட்கும் வேட்பாளர்கள்... சாட்டை வீசும் பொதுமக்கள்!

அ.தி.மு.க-வினருக்குச் சென்ற இடமெல்லாம் வெறுப்பு

தேர்தல் நேரம் மட்டும் மக்களைச் சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இது போதாத காலம். அ.தி.மு.க சார்பில் மீண்டும் போட்டியிடும் பழைய முகங்கள், புதிய முகங்கள் எல்லோருக்குமே அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு... கண்ணா மூச்சி காட்டும் அரசியல்வாதிகளுக்குச் சென்ற இடம் எல்லாம் வெறுப்பு. அவற்றின் தொகுப்பு இங்கே.

அ.தி.மு.க வேட்பாளரை விரட்டிய பெண்கள்!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியின் வேட்பாளர் இன்பதுரை பழவூர் அருகே உள்ள  மாறன்குளம் கிராமத்துக்குப் பிரசாரத்துக்குச் சென்றார். அப்போது அங்கு திரண்டுவந்த பெண்கள், ‘கடந்த 5 வருடங்களாக எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும்செய்து தரப்படவில்லை; குடிநீர் இல்லாமல் நாங்கள் அவதிப்படுவதைக் கேட்க இதுவரை யாரும் வரவில்லை. இப்போது மட்டும் எதற்காக எங்களிடம் வந்து ஓட்டு கேட்கிறீர்கள்?” என  ஆவேசப்பட்டனர். அங்கிருந்த கட்சிக்காரர்கள் அந்தப் பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு!

நெல்லை தொகுதியின்  அ.தி.மு.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சேந்திமங்கலம் பகுதிக்கு வாக்குச் சேகரிக்க சென்றபோது திரண்டுவந்த அந்தப் பகுதி மக்கள், ‘‘நீங்க போன தடவ ஜெயிச்சிட்டுப் போன பிறகு எங்க ஊருக்கே வந்ததில்ல. இப்ப எந்த முகத்தோட எங்ககிட்ட ஓட்டுக் கேட்டு வந்திருக்கீங்க. நீங்க ஊருக்குள்ள வரக்கூடாது” எனத் தகராறு செய்தனர். அவருடன் வந்திருந்த கட்சியினர் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி செய்தும் மக்கள் கோபத்துடனேயே இருந்தார்கள். “அவரை ஊருக்குள் வரக்கூடாது” என பொதுமக்கள் முரண்டு பிடித்தனர். போலீஸார் தலையிட்ட பின்னர் ஊருக்குள் நயினார் நாகேந்திரனை அனுமதித்தனர். ஆனாலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக வராததால் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்