ஆணாதிக்க அரசியல்... மல்லுக்கட்டும் மகளிர்!

சட்டமன்றத்தில் குறையும் பெண்களின் பிரதிநிதித்துவம்

சுவீடன், டென்மார்க், நார்வே போன்ற ஸ்காண்டிநேவியன் நாடுகளில் ஒரு ஜோக் உண்டு. பலமுறை பெண்கள் பிரதமராக இருந்து, ஒரு சமயம் ஆண் பிரதமர் தேர்வு செய்யப்பட்டபோது ஒரு குழந்தை, ‘ஓ... ஆண்கள்கூட பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்படலாமா?’ எனக் கேட்டதாம். பாலின சமத்துவம் இல்லாத சமூகத்தில் அது ஓர் நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய அரசியல் சூழலில் அது ஒரு வேதனை.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தி, ஒரு மசோதா கடந்த 20-2-2016 அன்று சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டது. 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளிலும் உள்ள இடங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதைத் திருத்தம் செய்துதான்,  உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவிதம் என தமிழக அரசு மாற்றியது.

33 சதவிகித இட ஒதுக்கீட்டை எத்தனைப் பெண்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்... எனவே, பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு தேவையற்றது என்ற விவாதங்கள் ஒருபுறம் நடக்கின்றன என்பதுதான் அவலத்தின் உச்சம்.

இன்னொருபுறம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம்  இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 1957-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலில் 20 பெண் வேட்பாளர்கள் களத்தில் நின்றார்கள். அந்த  வேட்பாளர்களில் ஒன்பது பெண்கள் வெற்றி பெற்று முதன் முதலாக தமிழக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தனர். பிறகு 1996-ல் நடைபெற்ற தேர்தலில்தான் 156 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆரம்பம் முதல் கடந்த தேர்தல் வரை  கணக்கில் எடுத்துக் கொண்டால், அதிகபட்சமாக 1991 தேர்தலில் 32 பெண்களும்  குறைந்தபட்சமாக 1977 தேர்தலில் 2 பெண்களும் வெற்றி பெற்றனர். ஆக, 1957 தேர்தல் முதல் 2011 தேர்தல் வரை மொத்த இடங்களில் 0.85 முதல் 13.67 சதவிகிதம் வரை பெண் உறுப்பினர்களின் வெற்றி இருந்தது.

“நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை,  காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்த முழு மூச்சாக செயல்பட்டனர். ஆனால், இந்த மசோதாவுக்கு எம்.பி-க்கள் மத்தியில்  போதிய ஆதரவு இல்லாததால்  செயல்படுத்த முடியாமல் போனது” என்கிறார் வழக்கறிஞர் சுதா.

“இந்த மசோதா பலமுறை விவாதத்துக்கு வந்து தோற்றுப்போனது. கனிமொழி உட்பட பல பெண் எம்.பி-க்களின் குரல் நாடாளுமன்றத்தில் சாகடிக்கப்பட்டது. இப்போது, பி.ஜே.பி இன்று வரை இந்த மசோதாவை  விவாதத்துக்குக்கூட கொண்டு வரவில்லை. அனைவருக்கும் சம உரிமை என்கிறது நமது அரசியல் அமைப்பு. பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி நடத்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லித்தான் எம்.பி-க்கள் பதவி ஏற்கிறார்கள். ஆனாலும் உரிமைக்காகப் போராட வேண்டியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்