“பணம் பதுக்கி வைத்திருப்பதை தேர்தல் கமிஷன் தடுக்கவில்லை!”

கொந்தளிக்கும் எதிர்க் கட்சிகள்

னல் பறக்கும் சட்டமன்றத்தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கரன்சிமழை குறித்த புகார்கள் அதிகரித்து இருக்கின்றன. கரூர் மற்றும் சென்னையில் நடைபெற்ற சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் புகார் அளித்திருக்கின்றனர். அதில் அவர்கள் சொல்லி உள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி ஊட்டுபவை.

“எங்கள் கட்சியின் சார்பில் உங்கள் அலுவலகத்துக்கும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த ஒரு தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தேர்தல் ஆணையத்தின் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டி தங்களது புகாரைத் தொடங்குகிறார்கள்.

பணத்தை திருப்பித்தரச் சொன்னார் கலெக்டர்!

‘‘தேர்தலில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் அ.தி.மு.க-வினரால் பதுக்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.5 கோடி அளவுக்குப் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்று நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், கண்துடைப்புக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கையின்படி, கரூர் மற்றும் சென்னையில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களிடம் தலா 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் 22-ம் தேதி நடந்த சோதனையில் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் குறுக்கிட்டு, கைப்பற்றப்பட்டப் பணத்தையும் பொருட்களையும் திருப்பிக்கொடுத்துவிடும்படி கூறியிருக்கிறார். அந்த மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர், அதே மாவட்டத்தில் இருந்துதான் ரூ.4.77 கோடி கைப்பற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆளும் கட்சிக்குச் சொந்தமான பள்ளி வளாகத்தில் இருந்து 3.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வேதாரண்யத்தில் ஆம்னி பேருந்தில் இருந்து 1.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் அ.தி.மு.க அரசின் உத்தரவின்பேரில் செயல்படுகின்றனர். கரூர் அன்புநாதன் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தேர்தல் நியாயமாக நடக்க வெளிமாநில போலீஸ் உயர் அதிகாரிகளைப் பணி அமர்த்த வேண்டும்” என்று அந்தப் புகாரில் சொல்லப்பட்டு உள்ளது.

இந்தப் புகார்கள் குறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்