மீண்டும் ஒரு வரலாற்று பிழை செய்தீர்!

வைகோ பற்றிய ஃபேஸ்புக் ‘பஞ்ச்’கள்!

ட்டமன்றத் தேர்தலில் களமிறங்க இருந்த வைகோ, திடீரென கடந்த 25-ம் தேதி விநாயகா ரமேஷ் என்பவரை, தான் போட்டியிட இருந்த கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யவைத்தார். வைகோவின் இந்த முடிவு, அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த வைகோ, “கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் என்னை மையப்படுத்தி சாதி வேற்றுமையையும், சாதி மோதலையும் ஏற்படுத்த தி.மு.க. திட்டமிட்டு இருப்பது, ஆதாரப்பூர்வமாக எனக்குத் தெரிய வந்துள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி இந்தத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” என்று தெரிவித்தார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைகோவின் முடிவுக்கு எதிர்வினைகள் எக்கச்சக்கமாகக் குவிந்தன. அதிலிருந்து சில இங்கே...

முஸ்தபா முகமது: “மீண்டும் ஒரு வரலாற்று பிழை செய்தீர். நிலையற்ற உங்களின் இம்மாதிரியான முடிவுகள் கூட்டணியின் நம்பகத்தன்மையையும் ஓட்டுகளையும் இழக்க நேரும். இது ஒரு தொகுதிப் பிரச்னை இல்லை. உங்களைப் பற்றிய குழப்பத்துக்கு இளைஞர்களை ஆட்படுத்தும். முடிவை மறுபரீசீலனை செய்யவும்.”

பி.தங்கராஜ்: “வைகோ அரசியலில் பழுத்தவர். இப்படி பின் வாங்குவது அவருக்கு  பின்னடைவுதான். அரசியல் என்றால் பிரச்னை வரத்தான் செய்யும். கோவில்பட்டியில் ஒரு மூலையில் நடந்த பிரச்னையை எதிர்கொள்ள முடியாத நீங்கள், எப்படி தமிழ்நாட்டை வழிநடத்த முடியும்?”
தர்மலிங்கம் முத்துசாமி: “யார் வேண்டுமானாலும் இவரை அசைத்துப் பார்க்கலாம் என்பது இவரின் பலவீனமே. இப்படியே சென்றால் நீங்கள் தமிழக அரசியலில் நிச்சயம் தடம் பதிக்க மாட்டீர்கள் திரு வைகோ அவர்களே...”

முகமது அப்துல்: “இம்முறை தமிழக சட்டமன்றத்துக்குள் நீங்கள் செல்லவில்லை என்றால், வேறு எம்முறைதான் செல்வது? அண்ணன் கலைஞரும் வரட்டும். நீங்களும் அங்கே இருங்களேன். இது ஒரு வரலாற்று வாய்ப்பு. ஒவ்வொருமுறை சட்டமன்றத் தேர்தல் வரும்போதும் வைகோ சறுக்குவார் என்ற அவப்பெயர் இம்முறை வேண்டாமே.நம்பகத்தன்மை சிறிதும் இல்லாதவர் என்ற அவப்பெயர் தொடர வேண்டாம்.”

ராமமூர்த்தி: “திரு.வைகோ அவர்களே. நீங்கள் அவசியம் தேர்தலில் நிற்க வேண்டும். கலவரம் வரலாம் என்றால், அதை வராமல் தடுப்பது காவல் துறை, தேர்தல் ஆணையத்தின் வேலை. உங்களின் பொறுப்பு. தேர்தலில் நின்று வெற்றி பெறுவது.

கானகத்தில், சிங்க வேட்டைக்குப் போகும்போது, சிறு நரிகள் உங்களின் கூடாரத்தை கலைக்கலாம் என்று எண்ணி பின்வாங்கக் கூடாது.”

ஜெய் சான்: “உங்கள் முடிவு சரியானதல்ல! ஜெயாவின் பி-டீம் என்பது உண்மையோ என்பது போல் இருக்கிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்