மிஸ்டர் கழுகு: அம்மா ‘மோட்டார் சைக்கிள்!’

ஜெ. க்ளைமாக்ஸ் சீக்ரெட்! அது... இது... எது?

“நாடு முழுக்க நகர்ந்து வரும் கரன்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்றால் அவற்றைச் சில இடங்களிலாவது தேர்தல் ஆணையம் பிடித்துவருவது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. என்ன இருந்தாலும் அவர்கள் அரசு அதிகாரிகள்தானே... எப்படி இது சாத்தியம்?” என்ற கேள்வியை கழுகாருக்கு அனுப்பி, ‘‘இதற்கான பதிலுடன் வரவும்” என்ற கட்டளையையும் போட்டு இருந்தோம்.

கழுகார் வரும்போதே, அவரது சிறகுகளுக்குள் இதற்கான ஆவணங்கள் இருந்ததைக் கவனிக்க முடிந்தது.

‘‘இப்போது ரெய்டு நடத்துவது தேர்தல் கமிஷனின் பறக்கும் படை மட்டுமல்ல, வருமானவரித் துறையினரும் இவர்களோடு இணைந்து இருக்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றால் மத்திய அரசாங்கத்தின் கை ஓங்கி இருக்கிறது என்றுதான் அர்த்தம்” என்று கண் அடித்தபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

‘‘மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பினாமியான கரூர் அன்புநாதன் சிக்கி இருக்கிறார். சசிகலாவின் நெருங்கிய உறவினரான சென்னை விஜயகுமார் மாட்டி உள்ளார். பொள்ளாச்சியில் டாக்டர் மகேந்திரன் சிக்கி உள்ளார். இவர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய சகா. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் நண்பர். அன்புநாதன், விஜயகுமார், மகேந்திரன் ஆகிய மூவருமே அதிகார மையத்துக்கு மிகவும் வேண்டியவர்கள், நெருக்கமானவர்கள் என்பதால் யாருக்கான பணம், எதற்கான பணம் என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது. கோடிக்கணக்கான பணம் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்