பெரியோர்களே... தாய்மார்களே! - 85

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ர்க்காரியா, 2ஜி என்றதும் கருணாநிதியின் முகம் நினைவுக்கு வருவது மாதிரி, பெங்களூரு, டான்சி என்றதும் ஜெயலலிதா முகம் முன்னுக்கு வரும். டான்சி மூன்றெழுத்து, மிடாஸ் மூன்றெழுத்து, லக்ஸ் மூன்றெழுத்து, ஊழல் மூன்றெழுத்து!

‘‘எனக்கென்று தனிப்பட்ட குடும்பம் இல்லை. தமிழ் மக்கள்தான் என் குடும்பம்” என்று சொல்லும் ஜெயலலிதா, ‘‘நான் ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்” என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். திருச்சியில் இந்த வார்த்தைகளை அவர் உச்சரித்தபோது, லேசாக குரல் உடைந்து, தழுதழுப்புடன் சொன்னதாகவே தெரிந்தது. தேர்தல் நேரத்தில் இது போன்ற உத்திகளை அரசியல் தலைவர்கள் பயன்படுத்துவதில் அதிர்ச்சி எதுவும் இல்லை.

‘‘நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக என் ஆட்சியைக் கலைத்தார்கள்? நீங்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் தமிழ்நாட்டில் தொடர்ந்து வாழத்தான் வேண்டுமா? என்று நான் யோசிப்பேன்” என்று பவானி கூட்டத்தில் கண்ணீர் வடித்தார் எம்.ஜி.ஆர். ‘‘எனக்கு 14 ஆண்டு காலத் தண்டனை போதாதா?” என்று கரகரக் குரலில் கண்ணீர் வடித்தார் கருணாநிதி. இதோ இப்போது ஜெயலலிதா நேரம். ‘‘எனக்கென்று யார் இருக்கிறார்கள். நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்” என்கிறார். பணத்தை வெறுக்கச் சொல்லும் சாமியார்களே பல்லாயிரம் கோடிகளைத் திரட்டி ஆசிரமங்களை அமைத்துக் கொள்ளும்போது பதவிக்கு ஆசைப்படும் அம்மாவிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்