“இந்தத் தேர்தலில் பரிதாபத்துக்குரியவர் வைகோதான்!”

கி.வீரமணி விளாசல்

‘‘ஒரு ஜனநாயக நாட்டில், மக்களோடு மக்களாகக் கலந்து ஒரு ஆட்சி இருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்றது ஆட்சி அல்ல... வெறும் காட்சிதான். அதுவும் காணொலிக் காட்சி. தேர்தல் பிரசாரத்திலும் காணொளிக் காட்சியை அந்த அம்மையார் தொடர்ந்து இருந்தால், நான்கு உயிர்களாவது போகாமல் இருந்திருக்கும்’’ என்று ஆதங்கப்படுகிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி.

சட்டமன்றத் தேர்தலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தி.மு.க-வை ஆதரித்து பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார் வீரமணி. வரும் 14-ம் தேதி தஞ்சையில் பிரசாரத்தை முடிக்க இருக்கிறார். பிரசாரத்துக்கு இடையே அவரிடம் பேசினோம்.

‘‘எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், இப்போது நிறைய அணிகள் களத்தில் உள்ளனவே?’’

‘‘கூட்டணி கிடைக்காமல் ஏமாந்தவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் போட்டியிலேயே கிடையாது. பிரதானக் கட்சிகளான தி.மு.க - அ.தி.மு.க இடையேதான் போட்டி. அடுத்த முதல்வர் கலைஞரா? ஜெயலலிதா அம்மையாரா என்பதுதான் இன்றைய நிலை.’’

‘‘தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா அணி, பி.ஜே.பி., பா.ம.க., நாம் தமிழர் கட்சி போன்ற அணிகளுக்கு வாய்ப்பு இல்லையா?’’


‘‘அவர்கள் எல்லாம் தங்களது கட்சிகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காகப் போட்டியிடுகிறார்கள். அவர்களது போட்டியை பொருட்படுத்த வேண்டியது இல்லை. அவர்களுக்குப் போடும் ஓட்டு, செல்லாத ஓட்டுக்குச் சமம். ஓடாத குதிரை மீது பந்தயம் கட்டி என்ன பயன்? தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றவுடன் பின் வாங்குகிறார்கள். நாளுக்கு நாள் அவர்களின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. ஜனநாயகத்தை பணநாயகமாக்கி வெற்றிபெற ஒருவர் துடிக்கிறார். ஆனால், மக்களை நம்பி ஊர்தோறும் கலைஞர் வந்து கொண்டிருக்கிறார்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்