தேர்தல் களத்தில் மகளிர் படை!

மிழக சட்டமன்றத் தேர்தலில் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் தனித்துவம் வாய்ந்த சிலரைப் பற்றி...

ரத்னா சேகர் (கும்பகோணம்)

10-ம் வகுப்பு வரை படித்தவர். ரதிமீனா டிராவல்ஸ் உரிமையாளர். தமிழகத்திலேயே சிறந்த நகராட்சி என்று பெயர்பெற்ற கும்பகோணம் நகராட்சியின் தலைவர். இவரது கணவர் சேகர், கும்பகோணம் நகர அ.தி.மு.க செயலாளர். தான் எம்.எல்.ஏ-வாகி, ஜெயலலிதா முதல்வர் ஆனால்தான் திருமணம் என்று சொல்லிவந்த ராமநாதனை நீக்கிவிட்டு, புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், ரத்னா சேகர். 

நூர்ஜகான் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி)


எம்.ஏ., எம்.ஃபில் படித்தவர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர். அ.தி.மு.க-வின் தலைமைக்கழகப் பேச்சாளர். இவரை ஜெயலலிதா நேர்காணல் செய்த புகைப்படம், பத்திரிகைகளில் வெளியானதால் மேலும் பிரபலம் ஆனார்.  அ.தி.மு.க நிகழ்ச்சி தொகுப்பாளர்.

சிம்லா முத்துச்சோழன் (ஆர்.கே.நகர்)


வழக்கறிஞர். தி.மு.க மகளிர் அணியின் பிரசாரக் குழுச் செயலாளர். இவரது கணவர் முத்துச்சோழனும் ஒரு வழக்கறிஞர். ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க-வால் களம் இறக்கப்பட்டவர். ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்டில் படித்தவர். இவர், தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் மருமகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்