சூரிய ஒளி மின்சாரத்தில் ஸ்வாகா!

உயர் நீதிமன்ற விசாரணையில் ‘ஷாக்’

ந்தையில் ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு கூவிக் கூவி விற்றுக்கொண்டிருக்கும்போது, அந்தப் பொருளை 3 ரூபாய்க்கு வாங்கினால் என்ன ஆகும்? இரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்படும். இப்படி இரண்டு ரூபாய் நஷ்டத்தில் கோடிக்கணக்கான பொருட்களை வாங்கினால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். அதைத்தான் செய்துள்ளார்  தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் என்று பதறவைக்கிறார்கள்.

நஷ்டமான தொகை ரூ.25,000 கோடி என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள். மக்களின் பணத்தைக் கோடி கோடியாக அள்ளிக் கொடுத்து, நஷ்டம் ஏற்படுத்தியதற்குப் பிரதிபலனாக அந்தத் தனியார் நிறுவனங்கள், என்ன பிரதிபலன் செய்துள்ளனவோ? இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலாகி இருக்கிறது. அதன் சாராம்சம் என்னவென்றால்...

சூரிய மின்சக்தி...

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடந்தபோது (2006 - 2011), மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. 15 மணி நேரம் ‘கரன்ட் கட்’ என்றாகி தமிழ்நாடு, இருண்ட காலத்தில் இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குடிசைத் தொழில் தொடங்கி ராட்சத இயந்திரத் தொழில்கள் வரை பாதிக்கப்பட்டன. அவை ஏற்படுத்திய தாக்கமும் மக்களின் மனதில் கிளம்பிய கோபமும், தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அ.தி.மு.க ஆட்சி அமையக் காரணமாக இருந்தன.

தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவில் பல மாநிலங்களிலும், இதுபோன்ற மின் தட்டுப்பாடு அந்த நேரத்தில் நிலவியது. அதனால், மின்சார உற்பத்தியில் மாற்றுவழி பற்றிய விவாதங்கள் நாடு முழுவதும் கிளம்பின. அதில் கண்டறியப்பட்ட புதிய தீர்வுதான், சூரிய மின்சக்தி. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சூரிய மின்சக்தியை ஒரளவுக்கு முயற்சி செய்தன. தமிழகமும் களத்தில் இறங்கியது.

2012-ம் ஆண்டு அதற்காக ஒரு கொள்கை வகுக்கப்பட்டது. 2012-ல் தொடங்கி 2015 வரை ஒவ்வோர் ஆண்டும் 1,000  மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கான தளவாடங்கள் தமிழக அரசிடம் இல்லை. வழக்கம்போல் தனியாருக்கு டெண்டர்விட முடிவு செய்யப்பட்டது. தனியாரிடமும் அதற்கான வசதிகள் இல்லை. அவர்களும் இனிதான் இடம் பார்க்க வேண்டும்; இயந்திரங்களை நிறுவ வேண்டும்; அதன்பிறகுதான், சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனாலும், நாங்கள் அதைச் செய்து கொடுப்போம் என்று பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், ‘புதுப்பிக்கத்தக்க மின்சார ஒழுங்கு முறை ஆணையம் (Reneval energy purchase obligation)’ என ஒரு கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. சூரிய மின்சக்திச் சட்டம் என்று அதற்குப் பெயர் கொடுத்து, 12 செப்டம்பர் 2014-ல் ஓர் உத்தரவைப் போட்டது தமிழக அரசு. அதன்படி,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்