போலி பத்திரங்கள்... நிலங்கள் பறிமுதல்!

ஏப்பம் விடும் அதானி குழுமம்!

தானி குழுமத்தால் கமுதி தாலுகாவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்திய விவகாரம் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தத்திலேயே சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிராக கமுதி தாலுகா விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் அரசு இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் கமுதி தாலுகா செயலாளர் முத்துவிஜயன், ‘‘கமுதியைச் சுற்றி உள்ள செங்கபடை, தாதாகுளம், புதுக்கோட்டை, கீழமுடி மன்னார்கோட்டை, சிங்கம்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள இந்த விவசாய நிலங்கள், மேய்ச்்சல் நிலங்கள், கண்மாய்கள், கால்வாய்கள் தவிர, அரசு நிலங்களும் அதானி குழுமத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. செங்கபடையில் இருந்து செந்தனேந்தல் கிராமத்துக்குச் செல்லும் சாலையைக்கூட விட்டுவைக்கவில்லை. பஞ்சமி நிலங்கள் மோசடி செய்து அபகரிக்கப் பட்டுள்ளன.

ஒரு ஏக்கர் நிலத்தை 2,000 ரூபாய்க்கு பவர் எழுதி வாங்கியவர்கள், நில உரிமையாளருக்குத் தெரியாமலேயே அதானி குழுமத்துக்குக் கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். நில மோசடி குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். நடவடிக்கை ஏதும் இல்லை. அதானி குழுமத்துக்கு ஆதரவாகத்தான் அவர்கள் செயல்படுகின்றனர்.  அதானி குழுமத்தின் திட்டத்துக்குத் தடையில்லாச் சான்று வழங்க மறுத்த பஞ்சாயத்துத் தலைவர்களை உயர் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். விவசாயிகள், தங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்த மண் அள்ளும் எந்திரத்தின் சாவியைப் பறித்தனர். இது தொடர்பான புகாரில், அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளை போலீஸ் ஸ்டேஷனில் நாள் முழுக்க இருக்கவைத்த கொடுமையும் நடந்தது. இந்தத் திட்டத்துக்குத் தரிசு நிலங்களை பயன்படுத்த வேண்டும். விரும்பும் விவசாயிகளின் நிலத்தை நியாயமான தொகை கொடுத்து வாங்க வேண்டும்.  போலிப் பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு  மாற்று இடங்களும், தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தித்தர வேண்டும். இவை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்