மீத்தேன் முதல் கெயில் வரை...

தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வாக்கு!

“இந்த வருஷம் ஐ.பி.எல் கோப்பை குஜராத் டீமுக்குத்தான் டா. புனே செமயா ஃபார்ம் பண்ணியிருக்கானுங்கடா’’ என்று ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி பற்றி அலசும் இளைஞர்களே... உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

எந்தச் சூழலில் இந்த சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது... தமிழகம் எதிர்நோக்கியுள்ள சூழலியல் பிரச்னைகள் என்ன... சமூகப் பிரச்னைகள் என்ன என்பது எல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

கூடங்குளம் அணுமின் நிலையம், நியூட்ரினோ திட்டம், மீத்தேன் பிரச்னை, பன்னாட்டு குளிர்பான ஆலை, சாதிப் பிரச்னை என தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் ஏதோ ஒரு வகையிலான பாதிப்புகளில் சிக்கியுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடலிலும், நிலத்திலும் கதிர்வீச்சால் ஆபத்து இருப்பதாக அச்சம் உள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையக் கதிர்வீச்சுப் பாதிப்பு தாம்பரம் வரை பரவி இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் வெளியானது. அணுமின் நிலையங்களில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை குறைந்தது 30 ஆயிரம் வருடங்களுக்குப் பாதுகாக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மையைச் சரியாக செயல்படுத்த முடியாத ஒரு அரசினால் அணுக்கழிவுகளை எப்படிப் பாதுகாக்க முடியும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்