எத்தனை எத்தனை இளைய ஆதீனங்கள்?

துரை ஆதீன மடத்துக்குப் புதிதாக இளைய ஆதீனத்தை நியமிப்பதாக அறிவித்ததும், தேர்தலில் அ.தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்வேன் என்று அறிவித்ததும், சில நாட்களாக அமைதியாக இருந்த மதுரை ஆதீனத்தை மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்பு நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்துப் பெரும் பிரச்னையானது. இதற்கு எதிராகப் பல்வேறு இந்து அமைப்புகள் போராடின. ஆதீன மடத்தை அரசே ஏற்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. தமிழக அறநிலையத் துறை மதுரை ஆதீனத்தின் மீது போட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவற்றில் இருந்து  தப்பித்துக்கொள்ளத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க பேச்சாளராக மதுரை ஆதீனம் அவதாரம் எடுத்தார். அ.தி.மு.க மேடைகளில் தீயாய் வேலை செய்தவர், ஊழல் வழக்கில் ஜெ. சிறைக்குச்சென்றபோது நடந்த போராட்டங்களிலும் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.  பிரமாண்ட யாகங்கள், பூஜைகளில் கலந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்