பெரியோர்களே... தாய்மார்களே! - 86

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘‘வில்லியை வீழ்த்த வந்த ஹீரோ'' என்று இந்தத் தேர்தல் அறிக்கைக்கு அடையாளம் கொடுத்துள்ளார் கருணாநிதிக்குப்பின் அந்தக் கட்சியின் அடுத்த தலைவராக ஆகப் போகும் மு.க.ஸ்டாலின். நம் மக்களுக்கு சினிமாவை உதாரணம் காட்டினால்தான் புரியும் என்பது ஸ்டாலினுக்கும் தெரியும். நமீதாக்களின் தேசத்தில் இதைவிடப் புரியும் உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அந்தத் தேர்தல் அறிக்கையின் 20-ம் பக்கத்தில் 16-வது வாக்குறுதியாகத் தரப்பட்டுள்ளது என்னவென்றால்....

‘‘முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீது கூறப்படும் புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக தமிழ்நாட்டில் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 1973-ம் ஆண்டில் பொது ஊழியர் (குற்ற நடவடிக்கை) சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், 1977-ம் ஆண்டில் அ.தி.மு.க அரசு பதவிக்கு வந்தவுடன் அந்தச் சட்டத்தை ரத்து செய்துவிட்டது. இப்போது மீண்டும் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்ட அமைப்பு அமைக்கப்படும்’’ என்று கருணாநிதி அறிவித்துள்ளார். உண்மையில் வரவேற்கப்பட வேண்டியது இது.

அமைச்சர்கள் ஆயிரம் கோடி வரை போய்விட்டார்கள் என்றால், கவுன்சிலர்கள் நூறு கோடியைத் தாண்டி விட்டார்கள். அரசாங்கம் கடனில் இருக்கிறது. ஆனால், அரசாங்கத்துக்குக் கடன் கொடுக்கும் ஊழல் உலக வங்கிகளாக அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் மேயர்களும் கவுன்சிலர்களும் வளர்ந்துவிட்டார்கள். தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இதில் வித்தியாசம் இல்லை. அன்புநாதன்கள் இப்போது சிக்கிவிட்டார்கள். ராஜாசங்கர்கள் இப்போது சிக்கவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

‘‘எங்கள் ஆட்சியிலும் தவறுகள் நடந்துள்ளன. தவறே நடக்கவில்லை என்று சொல்லவில்லை. நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி தவறுகள் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் தருகிறேன்'' என்று ஊர் ஊராகப் போய் சொல்லி வந்தார் ‘நமக்கு நாமே' மு.க.ஸ்டாலின். இவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்றால், இத்தனை தடவைகள் மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு அத்தனை தவறுகள் நடந்துள்ளனவா?

தமிழ்நாட்டில் ஊழல் என்ற வார்த்தை அரசியல் மேடைகளில் அதிகமாக உச்சரிக்கப்பட்டது என்றால், அது கருணாநிதி ஆட்சியில்தான். கருணாநிதியை ஊழல்வாதி என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியவர் வெளி ஆள் அல்ல. அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்திலேயே இருந்த எம்.ஜி.ஆர். தான் இப்படி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

‘‘முதலமைச்சர் மற்றும் அவரது உறவினர்களின் சொத்து விவரங்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அண்ணாவின் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு சிலை வைப்பதால் என்ன பயன்? அண்ணாவின் கொள்கையில் இருந்து முதலமைச்சர் விலகிச் சென்றுவிட்டார்’’ என்று திருக்கழுக்குன்றம் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கேட்டபிறகுதான் பிரச்னை கிளம்பி, தி.மு.க-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ‘‘நான் நடத்தும் கிளர்ச்சி என்பது தி.மு.க-வுக்கு எதிரானது அல்ல; கலைஞருக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் மட்டுமே எதிரானது’’ என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்.
‘‘ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்த பிறகு வந்ததா? அதற்கு முன்னால் வந்ததா? இதைக் கேட்கக் கூடாதா? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான். சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு'' என்று லாயிட்ஸ் தெரு கூட்டத்தில் கேட்டார் எம்.ஜி.ஆர். இதன் பிறகும் எம்.ஜி.ஆரை வைத்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் நீக்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்