“அ.தி.மு.க-வை விட்டுவைத்தால் நாடு கொள்ளைக்காடாகிவிடும்!”

மதுரையில் வெளுத்துக்கட்டிய கருணாநிதி

ரண்டாம்கட்டப் பரப்புரையைத் தொடங்க, 3-ம் தேதி மதியம் மதுரைக்கு விமானத்தில் வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, சங்கம் ஹோட்டலில் தங்கினார். அவரைச் சந்தித்தத் தென் மாவட்டச் செயலாளர்கள், தங்கள் பகுதிகளில் தி.மு.க-வுக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகப் புள்ளி விவரங்களுடன் தகவல்களைச் சொல்ல,  இதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தார். பிரசாரக் கூட்டத்தில் அந்த உற்சாகத்தை அவருடைய பேச்சில் காண முடிந்தது.

‘‘மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. நானும் மதுரையில் சுற்றிச் சுற்றி பார்க்கிறேன், அந்தச் சிலை எங்கே இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற பொய் மூட்டைகளை ஜெயலலிதா அவிழ்த்துவிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறார். அவரின் பொய் மூட்டைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இதற்குமேல் ஜெயலலிதாவை நம்பினால், நீங்கள்தான் ஏமாந்துபோவீர்கள்.

மதுரை முத்துவை நான் என்றும் மறப்பதில்லை. அவர் மேல் கொண்ட பற்று, பாசம் காரணமாக மதுரையை மாநகராட்சியாக மாற்றி அவரையே முதல் மேயராக ஆக்கிப் பெருமைபடுத்தியவன் நான். எனவே, எப்போதும் நான் மதுரையையும் மதுரை மக்களையும் நேசிப்பேன். தென்  மாவட்டத்தின் வளர்ச்சிக்காகத்தான் சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை முடக்க முயற்சிக்கின்றனர். எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தாலும்  சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று சபதம் எடுப்போம்” என்றவர், தி.மு.க ஆட்சியின் திட்டங்களையும் பட்டியிலிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்