தமிழக தேர்தல் களத்தில் டாக்டர் வேட்பாளர்கள்!

மிழக சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகளின் சார்பில் மருத்துவர்கள் பலர், வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரைப் பற்றி...

டாக்டர் ரொஹயா ஷேக்முகமது (திருச்சி கிழக்கு)

ம.தி.மு.க வேட்பாளர். திருச்சியில் ஃபாத்திமா மருத்துவமனை ஆரம்பித்து மருத்துவச் சேவை செய்துவருகிறார். பிறந்தது துவரங்குறிச்சி. வளர்ந்தது திருச்சியில். சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்தவர். பெண்கள் நல சிறப்பு மருத்துவர். ம.தி.மு.க மாநில மகளிர் அணிச் செயலாளர்.

டாக்டர் சதன் திருமலைக்குமார் (சங்கரன்கோவில்)


ம.தி.மு.க வேட்பாளர். இவரும், இவரது மனைவி சந்திரகாந்தமும் மருத்துவர்கள். 1991-ல் தி.மு.க சார்பில் தென்காசியிலும் 1996-ல் ராஜபாளையத்திலும், 2001-ல் ம.தி.மு.க சார்பில் சங்கரன்கோவிலிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

2006-ல் வாசுதேவநல்லூரில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ம.தி.மு.க-வின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்