“பெண்களை அரசியலுக்குவிடாமல் தடுப்பது குடும்பங்கள்தான்!”

ஈரோட்டில் நம் விரல்... நம் குரல்!

னைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்கெடுத்து விட்டார்கள். அரசியலிலும் பெண்கள் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நாளுக்கு நாள் அரசியல் பற்றிய பயம் பெண்களுக்கு அதிகம் ஆகிவருகிறது. அது எல்லாப் பெண்களின் பேச்சிலும் எதிரொலிக்கிறது. தமிழகம், தேர்தலை எதிர்நோக்கிச் செல்லும் நேரத்தில் விகடன்  குழுமம் சார்பாக எதிர்காலத்  தலைமுறைகளைச் சந்தித்து, ‘நம் விரல்... நம் குரல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல்  நடத்தி வருகிறோம். ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள  நவரசம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம், ‘அரசியலுக்குப் பெண்கள் வருவது, பங்கெடுப்பது அதனால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய நெருக்கடிகள்’ குறித்து விவாதம் செய்யப்பட்டது. மிகத் தீவிரமாகப் பல கருத்துக்களை அந்த மாணவிகள் முன் வைத்தார்கள்.

“பெண்கள் அரசியலுக்குக் கண்டிப்பா வர வேண்டும். வீட்டு நிர்வாகத்தை ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அக்கறையோடும், பொறுப்போடும் பார்த்துக் கொள்கிறார்கள். என்னதான் ஆண்கள் சம்பாதித்தாலும்கூட குடும்பத்தை வழிநடத்தி, சேமிப்பும் செலவும் சரியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்வதில் பெண்களை மிஞ்ச முடியாது. தனிபட்ட ஒரு பெண், தன் வீட்டையே பாதுகாப்புடன் வழிநடத்தும்போது அவர்கள் அரசியலுக்கு வந்தால், நாட்டை தனித்திறன் கொண்டு வழிநடத்துவார்கள். ஆனால், குடும்பத் தலையீடு இல்லாமல் இருந்தால்தான் பெண்களால் அரசியலில் வெற்றி பெறமுடியும். இனி, பெண்கள் தாங்கள் படிக்கும் கல்வியோடு சட்டத்தையும் சேர்த்துப் படிக்க வேண்டும். அப்படிப் படித்தால் நிறையப் பெண்கள் அரசியலுக்குத் தைரியமாக வருவார்கள். பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். அதற்குத் தவறான அர்த்தம் சொல்கிறார்கள். உண்மையான அர்த்தம்... பெண்கள் பின்னாடி நடக்கக்கூடிய விஷயத்தை முன்னாடியே கணிக்கக்கூடியவர்கள் என்று பொருள். அப்படி, பிற்காலத்தில் நடக்கக்கூடியதை முன்கூட்டியே கணிக்கக்கூடிய பெண்கள் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது?”

“பெண்கள் அரசியலுக்கு வர முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவர்களின் வீட்டுச் சூழல். ஏதாவது பிரச்னை என்றால், பெண்களை வெளியே விடுவது இல்லை. ஒரு வீட்டில் இருந்துதான் மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்படி அரசியலுக்கு வரும் பெண்கள், பாரதியார் கண்ட புதுமைப் பெண்களாகத்தான் இருப்பார்கள். இப்போதுள்ள பெண்கள் அரசியல் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தேவையான ஊக்கம் அளித்து வழிநடத்தினால் அரசியலுக்கு வந்து சாதிப்பார்கள்.

பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை. ஆனால், பெண்களுக்கு கற்பு என்னும் தடைக்கல்லை வைத்து அவர்களை எந்தத் துறையிலும் சாதிக்கவிடாமல் செய்கிறார்கள். எதைச் செய்தாலும் கற்புக்குக் களங்கம் கற்பிப்பதுதான் இன்றைய வழக்கமாக உள்ளது. சொல்லும் விஷயம் சரியாக இருந்தால் அதை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் ஏற்றுகொள்ளும் குணம் மக்களுக்கு வர வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்