வரிசையாக விடுமுறை... வாக்குப்பதிவு குறையுமா?

மிழக சட்டமன்றத் தேர்தல் மே 16-ல் நடக்க இருக்கிறது. அன்று, திங்கட்கிழமை. தேர்தல் என்பதால், அன்றைய தினம் அரசு விடுமுறை. அதற்கு முந்தைய நாட்களாக சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்கள். ஆகவே, தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விடுமுறை வருகிறது. அனைவரும் அவசியம் தவறாமல் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை நடத்திவரும் நிலையில், வரிசையாக மூன்று நாட்கள் விடுமுறை வரும் வகையில் தேர்தல் நடக்கவிருக்கிறது.

வரிசையாக விடுமுறை என்பதால், பலர் கோடை சுற்றுலாவுக்குத் திட்டமிட வாய்ப்பு இருக்கிறது. இதனால், வாக்குப்பதிவு குறையலாம் என்ற பேச்சு பரவலாக உள்ளது.

“அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்துமே தேர்தல் நாளான மே 16 அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்துள்ளன. அதனால், வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிறு இரவு வரை விடுமுறையைக் கழிக்கவே மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த ஆர்வம் வாக்களிப்பில் இருக்குமா என்பது சந்தேகமே.

அதேபோல், வாக்களிக்கும் நாள் அன்று ஆண்கள் மட்டும் வீட்டில் இருந்துகொண்டு, பிள்ளைகளையும் மனைவியையும் விடுமுறைக்கு வெளியூருக்கு அனுப்பி வைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை. ஆனால், தொடர்ச்சியான விடுமுறையால் வாக்குப்பதிவில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியவரும்” என்கிறார் சமூக ஆர்வலர் இளங்கோ.

தேர்தல் கமிஷனின் இந்த முடிவு தவறானது என்கிறார், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சிறுவணிகர் ஆனந்த் ஜெயின். “எலெக்‌ஷன் கமிஷன், தேர்தல் தேதியை தப்பா சொல்லிட்டாங்கன்னுதான் நினைக்கிறேன். விடுமுறை நாட்களில் தேர்தல் வைத்திருந்தால் பூத்துக்கு வந்து மக்கள் ஓட்டு போடுவார்கள். வார வேலை நாட்களில் தேர்தலைவைத்து, அன்று அரசு விடுமுறை நாள் என்றும் சொல்லியிருப்பது நல்ல விஷயமாகவே இருந்தாலும், அதற்கு முந்தைய இரண்டு நாட்களும், விடுமுறை நாட்களாக அமைந்து விட்டதைத் தெரிந்தோ, தெரியாமலோ கவனிக்காமல் கோட்டைவிட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்