ஐயோ... எலெக்‌ஷன் டியூட்டியா?

அலறும் அரசு ஊழியர்கள்

‘எலெக்‌ஷன் டியூட்டி’ என்றாலே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தெறிக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எல்லாத் தேர்தல்களும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வைத்துத்தான் நடத்தி முடிக்கப்படுகின்றன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தேர்தல் பணி ஆற்றியாக வேண்டும். தேர்தல் பணியாற்ற மறுப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

‘தேர்தல் பணி ஆற்றுவதற்கு நாங்கள் தயார். ஆனால், எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தேர்தல் ஆணையம் செய்துகொடுக்க வேண்டாமா?’ எனக் குமுறுகிறார்கள் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்.

இவர்களின் குமுறலுக்குச் சில உதாரணங்கள்...

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் மேகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாநகராட்சிப் பள்ளி ஆசிரியையான இவர், எட்டு மாதக் கர்ப்பிணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தேர்தல் பணியாற்ற உத்தரவு வந்தது. தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டினார். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர். இவரது குடும்பத்தினர் ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்து, அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஓய்வின்றி தேர்தல் பணி முடித்து, சென்னைக்குத் திரும்பும் வழியில், அந்தப் பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றபோது, வயிற்றுக்குள் குழந்தை இறந்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இன்னொரு சோகச் சம்பவம். அரக்கோணம் குமினிப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை பூங்கொடி. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், வாணியம்பாடி அருகே ஒரு கிராமத்தில் தேர்தல் பணி. வாக்குப்பதிவு முடிந்து எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்துவிட்டுக் கிளம்ப நள்ளிரவு ஆகிவிட்டது. அங்கு தங்குவதற்கு வசதி இல்லை. நள்ளிரவில் வாணியம்பாடி ரயில் நிலையம் வந்த அவர், தண்டவாளத்தைக் கடந்தபோது, ரயிலில் அடிபட்டு இறந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்