‘‘ஜனதா சாப்பாட்டை மறந்துவிடாதீர்கள்!’’

70 தொகுதிகளில் ஜனதா முன்னணி

ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட ஜனதா கட்சி, சத்தமே இல்லாமல் இந்தத் தேர்தலில் களத்தில் நிற்கிறது. பீகாரில் ஆளும் கட்சியாக இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவற்றுடன் ஜெபமணி ஜனதா, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், தேசிய ஸ்தாபன காங்கிரஸ், கோகுல மக்கள் கட்சி, கொங்குதேச மக்கள் மறுமலர்ச்சி கட்சி ஆகியவை இணைந்து ‘ஜனதா முன்னணி’ என்ற கூட்டணியை உருவாக்கி 70 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள். காமராஜரின் தொண்டரான ஜான் மோசஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் பொதுச்செயலாளர் ஆக இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

“ஜனதா கட்சிகளுக்குத் தமிழகத்தில் செல்வாக்கு உள்ளதா?’’

“மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் அதிக உறுப்பினர் களைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நாங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கிறோம். அடுத்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யை வீட்டுக்கு அனுப்பப் போவது ஜனதா கட்சிகள்தான். நாட்டில் ஜனதா கட்சிகளின் தேவை அதிகமாகியுள்ளது. பிரிந்துக் கிடக்கும் அனைத்து ஜனதா கட்சிகளும் ஒன்றாக இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது.’’

“தி.மு.க., அ.தி.மு.க தவிர பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கவில்லையா?’’

“தி.மு.க-வோடு கூட்டணி வைக்க முயற்சித்தோம். அவர்களோ, ‘ஆதரவைக் கொடுங்கள். சீட் ஒதுக்க முடியாது’ என்றார்கள். அ.தி.மு.க-வின் கொள்கை களோடு எங்களுக்கு உடன்பாடு இல்லை. பி.ஜே.பி எங்களின் எதிர்க் கட்சி. பா.ம.க பேசும் சாதிய வாதத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.’’

“எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறீர்கள்?’’

‘‘மதசார்பற்ற ஜனதா தளம் 5, ஐக்கிய ஜனதா தளம் 11, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 10, ஜெபமணி ஜனதா 3, தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் 13, மக்கள் கோகுல கட்சி 28 என மொத்தம் 70 தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.’’

“தமிழகத் தேர்தல் களத்தில் பிரபலமான கட்சிகள் இருக்கும்போது, ‘ஜனதா முன்னணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள்’ என்று நம்புகிறீர்களா?’’

“இப்போது மக்களுக்கு அதிகமான விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. அன்று ஜனதா ஆட்சியில் போடப்பட்ட  விலை மலிவான ஜனதா சாப்பாட்டை இப்போதும் பேசுகிறார்கள். அதனை நினைத்து மக்கள் வாக்களிப்பார்கள்.”

- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்