பெரியோர்களே... தாய்மார்களே! - 87

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

 

திராவிடத்தை வீழ்த்த புதிய தேவதூதர்கள் கிளம்பி இருக்கிறார்கள். 50 ஆண்டுகாலத் தமிழகத்தைத் திராவிட இயக்கமே சிதைத்துவிட்டது என்பது இவர்களது அரிய கண்டுபிடிப்பு!

ஊழலால், முறைகேட்டால், அராஜகத்தால், தனிமனிதத் துதியால், தன் முனைப்பால், தான் என்ற அகங்காரத்தால், ஆடம்பரத்தால், குடும்ப ஆதிக்கத்தால் தமிழ்நாட்டு அரசியலைத் தரைமட்டத்துக்கு இறக்கியதில் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பெரும் பங்கு உண்டு என்பது உண்மைதான். உண்மை மட்டும் அல்ல... முழு உண்மையும்தான். முழு உண்மை மட்டுமல்ல... யாராலும் மறைக்க முடியாத உண்மைதான். மறைக்க முடியாதது மட்டுமல்ல, மறக்கக்கூடாத உண்மைதான். ஆனால், இவை மட்டுமே திராவிட இயக்கம் அல்ல. கருணாநிதியும் ஜெயலலிதாவும் திராவிட இயக்கத்தில் இடையில் வந்து ஆக்கிரமித்துக் கொண்டவர்களே தவிர, இவர்களே ஆதியும் அந்தமும் அல்ல. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் அரைநூற்றாண்டு களுக்கு முன்பும் திராவிட இயக்கச் சிந்தனை இந்த மண்ணில் இருந்தது. இன்னும் அரைநூற்றாண்டுக்குத் தாக்குப் பிடிக்கும் வலிமையும் அந்தச் சிந்தனைக்கு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்