ஹோலோகிராமில் ஜெ. - பர்கரில் தி.மு.க. கொடி... -டோல்ஃப்ரீ நம்பரில் தேர்தல் அறிக்கை...

டெக்னோ தேர்தலுக்குத் தயார் ஆகுங்கள்!ஓவியம்: ஹாசிப்கான்

ந்தத் தேர்தலில் பா.ம.க நடத்திய வண்டலூர் கூட்டத்தை மக்கள் மிகவும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். அவர்கள் கூட்டிய கூட்டமோ, அன்புமணி பேசிய வார்த்தைகளோ அதற்குக் காரணம் அல்ல. ஒரே காரணம், அன்புமணி அன்று நிகழ்த்திய டெக்னிக்கல் அசத்தல்தான். ‘‘நகரும் மேடையில் மைக், அமெரிக்க தேர்தல் களம்போல சட்டை காலரில் பொருத்திய மைக் என சின்ன ஐயா என்னமா கலக்குறார்யா’’ என சந்தோஷப்பட்டார்கள் பா.ம.க-வினர். அன்புமணியின் டெக்னோ புரட்சி இப்படியெனில், சீமான் அணியினர் வைத்து இருக்கும் ட்ரான்ஸிஸ்டர் எல்லாம் வேற லெவல். 2016 தேர்தலே இப்படியெனில், 2021 தேர்தலில் கட்சியின் பிரசாரங்கள் தொடங்கி, தேர்தல் அறிக்கை வரை எங்கும் எதிலும் டெக்னாலஜியே முக்கிய இடம் பிடிக்கும். அப்படி என்னவெல்லாம் நடக்கும், கற்பனை செய்து பார்த்தோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்ஃபரென்ஸிங்கில் தொடங்கிவைத்த திட்டங்கள் மட்டும் ஏராளம். கடந்த ஒரு மாதமாக, அவர் தமிழகம் முழுவதிலும் நடத்திய ஹெலிகாப்டர் பிரசாரங்கள் எல்லாம் நிச்சயம் அடுத்த தேர்தலில் இருக்காது. அமைச்சர்களே ஹோலோகிராம் லென்ஸுகளை ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவர். அவர் பேசும் சமயம், நாம் அதை ஆன் செய்து வைத்தாலேபோதும். ஹோலோகிராம் மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் ஜெயலலிதா தோன்றி பிரசார உரைகள் ஆற்றுவார்.

அதேபோல், சாலையின் இரு புறமும் தொங்கும் ஹோர்டிங் போர்டுகளில் பிரசார விளம்பரங்களுக்குப் பதிலாக, பிரசார வீடியோக்கள் ஒளிபரப்பாகும். ட்ராஃபிக் சிக்னலில் நீங்கள் நிற்கும்போது, “ஒரு தாய்க்கு மட்டும்தான் தெரியும், தன் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும்” என்று ஜெயலலிதா ஹோர்டிங்கில் உரையாற்றுவார். க்ரீன் சிக்னல் விழுந்ததும் மறைந்துவிடுவார் அல்லது அவர் மறைந்த பின் க்ரீன் சிக்னல் விழும்.

ஃப்ளிப்கார்டு, அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கட்சி தொடர்பான கொடிகள், போர்டுகள் இருக்கும். புதன்கிழமை பிரசாரத்துக்கு திங்கட்கிழமை ஆன்லைனில் புக் செய்வார்கள். பிரசார முடிந்ததும், வாங்கிய பொருட்களை OLX-ல் விற்றுவிடலாம். அடுத்த இடத்தில் கூட்டம் சேர்ப்பவர்கள், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பிரசாரப் பொதுக் கூட்டத்துக்கு மக்களை அழைத்துவருவதுதான் மிகப் பெரிய வேலை. முதலில் ஆர்வமாக வந்த கூட்டம், நாளடைவில் காசு வாங்கிக்கொண்டு வர ஆரம்பித்தது. அந்த எண்ணிக்கையைப் பொறுத்து வெற்றிவாய்ப்பு இருக்கலாம் என்றுகூடக் கணித்தார்கள். இது யூ ட்யூப் காலம். ஒரு படத்தின் டீசரோ, ட்ரைலரோ எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதைவைத்து விநியோகஸ்தர்கள் விலை கூட்டி வாங்குகிறார்கள். அதுபோல, கழக பிரசார வீடியோக்களை அதிக பேர் பார்க்க தலைவர்கள் ஆசைப்படலாம். அதற்காக, ஒருவரே பல முறை வீடியோ பார்த்தால் கழகக் கண்மணிகள் மொபைல் ரீசார்ஜ் செய்துகொடுக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்