பெண்கள்... குழந்தைகள்... கண்டுகொள்ளாத கட்சிகள்!

குடும்பம், அலுவலகம், சமூகம் எனப் பல்வேறு தளங்களில் தங்களது கடமைகளை உணர்ந்து செயல்படும் தனித்துவம், பெண்களுக்கே மட்டுமே உண்டு. கருவறையிலிருந்து கல்லறை வரை பிரச்னைகளைச் சுமந்து சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு அரசியலிலும் தேர்தலிலும் உரிய பங்கு இல்லை என்பது வேதனை.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 5.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2 கோடியே 90 லட்சத்து 93 ஆயிரத்து 349 பேர் பெண்கள். கிட்டத்தட்ட சரிபாதி. ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவச கைப்பேசி, கல்விக்கடன் தள்ளுபடி என இலவசத் திட்டங்களால் நிரம்பியிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் மட்டும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிப் பேசும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று தெரியுமா?!

தேர்தல் அறிக்கைகளில் இருப்பதென்ன?

அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி மற்றும் பி.ஜே.பி ஆகிய கட்சிகள் பெண்களின் நலனுக்காக முன்னிறுத்தியுள்ள வாக்குறுதிகளில் முன் நிற்பது, பெண்களின் திருமண நிதி உதவித்திட்டங்கள்தான். பெண்களுக்கான திருமண உதவித்தொகை, தாலிக்கான தங்கத்தின் அளவு ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் ஸ்கூட்டர், சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் ரத்து, ஆட்டோக்கள் வாங்குவதற்கு மானியம், பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்துவது உள்ளிட்டவையும் இந்தக் கட்சிகளின் அறிக்கைகளில் பட்டியலிட்டுள்ள அம்சங்கள்தான். பெண்களின் உயர் கல்விக்காக மகளிர் பல்கலைக்கழகங்கள், காவல் துறையில் பெண்களுக்கான சிறப்பிடம் போன்ற திட்டங்களில் பா.ம.க மட்டுமே வித்தியாசம் காட்டியுள்ளது. வழக்கம்போல பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு என்பது எப்போதும் தேர்தல்களின்போது மட்டும் கணக்கில் கொள்ளப்படும் ஒன்று. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தப்படும் என்று வாக்குறுதியும், பெண்களின் பாதுகாப்புக்காகச் சிறப்புத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்புகளும் எந்த கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் மிஸ் ஆகவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்