எச்சரிக்கை... மன்னிப்பு... வாக்குறுதி!

தி.மு.க. பிரசாரத்தின் 3 அம்சங்கள்!

ப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறது தி.மு.க.!

தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பேசுகின்றனர். அனல் பறக்கும் பிரசாரக் களத்தில் அவர்கள் முன்வைக்கும் அம்சங்களின் தொகுப்பு இங்கே...

தி.மு.க தலைவர் கருணாநிதி, சென்னையில் தொடங்கி திருவாரூர், மதுரை என எல்லா மேடைகளிலும் முந்தைய தி.மு.க ஆட்சியின் திட்டங்களைப் பட்டியல் இடுகிறார். ஆட்சி அமைந்ததும் மதுவிலக்குக் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறார். அன்புநாதன் வீட்டில் பணம் பதுக்கப்பட்டது உள்ளிட்ட ஆட்சியின் அவலங்களைப் பேசுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று புள்ளிவிவரங்களை அடுக்கி ஓட்டு கேட்கிறார். ஆட்சி என்ற பெயரில் தமிழகத்தில் கொள்ளை நடக்கிறது என்றும், அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் குட்டிச்சுவராகி விட்டது என்றும், மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் எதிர்காலம் இருண்டுவிடும் என்றும் உச்சகட்டமாக எச்சரிக்கைசெய்து குரல் உயர்த்திச் சொல்கிறார் கருணாநிதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்