“மக்களால் நான்... மக்களுக்காக நான்!”

நெகிழ்ந்து உருகும் ஜெயலலிதா!

“மக்கள்தான் என் மூச்சு... மக்களால் நான்... மக்களுக்காகவே நான். உங்களால் நான்... உங்களுக்காகவே நான். என் மீது உங்களுக்கு நம்பிக்கை... உங்கள் மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை. தர்மம் வெல்ல, அதர்மம் தோற்க, சத்தியம் வெல்ல, சந்தர்ப்பவாதம் தோற்க, நாடு வளம் பெற, நயவஞ்சகக் கூட்டம் அழிந்திட, நம்பிக்கை வெற்றி பெற, நாடகம் தோற்க மகத்தான வெற்றியை வழங்க வேண்டும். மக்கள்தான் என் மூச்சுக் காற்று. உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு வாய்ப்புத் தாருங்கள்” என்று சென்டிமென்ட் பிரசாரம் செய்து வருகிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.

விலையில்லா வெள்ளாடுகள், கறவை மாடுகள், தாலிக்குத் தங்கம், மிகக் குறைந்த விலையில் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கும் திட்டம், மகப்பேறு நிதியுதவித் திட்டம், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், முதியோர் உதவி திட்டம், மடிக்கணினி என கடந்த ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.

“மதுவிலக்கு சாத்தியமே இல்லை” என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். ஆனால், மதுவிலக்கு முக்கியப் பிரச்னையாக மாறிவிட்ட நிலையில் இப்போது, “படிப்படியான மதுவிலக்குக் கொண்டு வரப்படும்” என்று சொல்லி வருகிறார் ஜெயலலிதா. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் மோசடிகள் குறித்து சகாயம் ஐ.ஏ.எஸ் அளித்த அறிக்கை குறித்தோ, தாது மணல் குறித்து ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ் அளித்த அறிக்கை குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாத ஜெயலலிதா, “கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளைக்கு முடிவு கட்டப்பட்டது” என்று பெருமிதத்துடன் சொல்லி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்