"இரண்டுமே ஊழல் கட்சிகள்..."

தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. அணி

“அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தைச் சீரழித்துவிட்டன. இந்த இரண்டு கட்சிகளும் இனி ஆட்சிக்கு வரக் கூடாது. இந்த இரு கட்சிகளுக்கும் நாங்கள்தான் மாற்று” என உரத்த குரலில் சொல்லி வருகிறார்கள், தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா அணியினர்.

தே.மு.தி.க., ம.தி.மு.க., சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ., வி.சி.க., த.மா.கா ஆகிய ஆறு கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட மெகா கூட்டணியின் தலைவர்களின் பிரசாரத்தின் முக்கிய அம்சங்கள் இதோ....

“கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு எதிரி கருணாநிதி. இவர்கள் இரண்டு பேருக்கும் எதிரி விஜயகாந்த்” என்று தொடங்கி, “தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே ஊழல் கட்சிகள்; குடும்ப ஆட்சி நடத்துபவர்கள்; ஊழல்வாதிகள்” என்று குற்றம்சாட்டி வருகிறார், தே.மு.தி.க-வின் தலைவரும் இந்த அணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த்.

ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ, “நாங்கள் ஆட்சிக்கு வருவோம். முழுமையான மதுவிலக்கைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுப்போம்” என்று சொல்கிறார். லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவோம் என்று தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே சொல்லி வருவதையும், இவர்  கடுமையாக விமர்சிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்