"ஊழலற்ற அரசாங்கம்!"

பி.ஜே.பி-யின் பிரசார மேடை

பிரதமர் மோடி, பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பி.ஜே.பி அணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பட்டுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பிரசாரம்செய்த அமித்ஷா, இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஏகத்துக்கும் வறுத்தெடுத்தார். “தி.மு.க-வும், காங்கிரஸ் கட்சியும் பூமிக்கு அடியில் நிலக்கரி ஊழல், ஆகாயத்தில் 2ஜி ஊழல் என எதையும் விட்டுவைக்கவில்லை. குழந்தைகள் குடிக்கும் பாலில்கூட கலப்படம் செய்து ஊழல் செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க தலைவி, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்திருக்கிறார்” என அமித்ஷா ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதே நேரத்தில், “தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட்டுள்ளது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, மாநில அரசு தூங்கிக்கொண்டிருந்தது. பிரதமர் மோடி வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு, ரூ.2,000 கோடியை வழங்கினார்” என்று பி.ஜே.பி-க்கு சாதகமான அம்சங்களையும் அமித்ஷா முன்வைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்