அன்புமணியாகிய நான்...

பா.ம.க-வின் தேர்தல் வியூகம்!

தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தேர்தல் களத்தில் குதித்த ஒரே கட்சி பா.ம.க. முதல்வர் வேட்பாளர் யார் என அறிவித்ததுடன், அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன்தான் கூட்டணி என்பதிலும் உறுதியாக இருந்தது அந்தக் கட்சி.

இலவசமாக மாடு தருகிறோம், மிக்ஸி தருகிறோம் என அறிவிக்காமல் மக்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவச் சேவை அளிப்போம்... இலவசக் கல்வி அளிப்போம் என்பதையும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுத் திரும்பிப் பார்க்கவைத்தனர். மது ஒழிப்பில் முனைப்பாக இருக்கும் அந்தக் கட்சி மதுவிலக்கை அறிவித்து, முதல் கையெழுத்திடுவோம் என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

இது நம்ம சென்னை, இது நம்ம கோவை என்ற நகரத்து அறிமுகங்களோடு களத்தில் இறங்கினார் அன்புமணி.

‘‘ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், உழவர்கள் வாழ்க்கைத் தரம் உயர வேளாண்மையில் ஏற்றம் தரும் மாற்றம் காண்போம், உழைக்கும் மக்களுக்கான பொருளாதாரத்தை உருவாக்குவோம், ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்த மின்துறை மேம்பாடு, அனைத்துத் தேவைகளுக்கும் தடையில்லாமல் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்தல், பால் உற்பத்தியாளர்கள்  - நெசவாளர்கள் நலன் பாதுகாக்கப்படும், மீனவர் நலன் பாதுகாக்க வழிமுறை, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகநீதிக் கொள்கை, அரசு நிர்வாகத்தின் அச்சாணிகளான அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு வளமான எதிர்காலம் ஏற்படுத்துவோம், தாதுமணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்களை சுயநல சக்திகள் சுரண்டுவதைத் தடுப்போம்,  நகரங்களை மேம்படுத்தி மகிழ்ச்சியான பூமியாக மாற்றுவோம்’’ என்பது அவருடைய பிரசாரத்தில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்