“புதுச்சேரியின் வளர்ச்சியைத் தடுக்கிறார் ஜெயலலிதா”

ரங்கசாமி ஆவேசம்!

டந்த 2011-ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கியபோது காலாப்பட்டில் இருக்கும் சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் முதல் பிரசாரத்தைத் தொடங்கினார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. இந்த முறையும் அங்கிருந்தே பிரசாரத்தைத் தொடங்கிய அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் காய்ச்சி எடுக்க ஆரம்பித்தார். “ ‘புதுச்சேரிக்கு நான் துரோகம் இழைத்ததாகவும் எனக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்’ என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவர் எதை வைத்து அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. புதுச்சேரியில் இருக்கும் விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக தமிழக அரசிடம் கடந்த 10 ஆண்டுகளாக நிலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கே புதுச்சேரி வளர்ச்சி அடைந்துவிடுமோ என்று தராமல் இழுத்தடிக்கும் அவர் துரோகியா... நான் துரோகியா?

கலால் துறையின் மூலம்தான் நம் மாநிலத்துக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு வெளிநாட்டினர் உட்பட அதிகமான சுற்றுலாப் பயணிகள் தினம் வந்து செல்கின்றனர். அப்படி வந்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டுத் திரும்பிச் செல்லும் அண்டை மாநிலத்தவர்கள் இரண்டு மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். ஆனால், இதன்மூலமும் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துவிடுமோ என்று அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த பாட்டில்களை தமிழகத்துக்கு உள்ளேயே செல்லவிடாமல் தடுத்துவிடுகிறார்கள். புதுச்சேரியில் மழை நிவாரணமாக நான்காயிரம் ரூபாய் கொடுத்தோம். ஆனால், அதைக்கூட முழுமையாக வழங்க முடியாத அரசுதான் தமிழக அரசு” என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்