சொல்கிறார் ஜெ.! - சொன்னதை செய்தாரா ஜெ.?

‘‘ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்கு முன்பு  ஆயிரம் முறை யோசிப்பேன். அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ - தஞ்சாவூர் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை. அவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை? அலசுவோம்... ஆராய்வோம்.

50 சதவிகித மானியத்தில் ஸ்கூட்டர், 100 யூனிட் இலவச மின்சாரம், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு செல்போன் என தேர்தல் அறிக்கையில் கலர் மத்தாப்புகளை கொளுத்திப் போட்டியிருக்கிறது அ.தி.மு.க. ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு நினைத்துக்கூடப் பார்க்காத பல திட்டங்களை, செயல்படுத்தி உள்ளோம். ஐந்தாண்டு ஆட்சியில் எவ்வளவு செய்திருக்கிறோம் என்ற உண்மை தெரிந்தால், எதிரிகள் மூர்ச்சையடைந்து விழுந்துவிடுவார்கள்’’ என தேர்தல் பிரசாரத்தில் முழங்கி வருகிறார் ஜெயலலிதா. 2011 தேர்தல் அறிக்கையிலும் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்திலும் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை அறிந்தாலே இப்போது வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை நிறைவேறக்கூடியதா என்ற உண்மை புரியும்.

2011 அ.தி.மு.க தேர்தல் அறிக்கை!

2011 தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க சொன்ன அறிவிப்புகளில் நிறைவேறாமல் இருப்பவை:

* சென்னை டு கன்னியாகுமரி வரை கடலோரச் சாலை திட்டம்.

தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’ (AERO PARK).

On-line Trading  தடுக்கப்படும்.

வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட மூன்று சென்ட் இடம்.

10 ஆடை அலங்காரப் பூங்காக்கள் (Apparel Parks).

திருப்பூர் சாயக்  கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞான முறையில் கழிவு அகற்றும் நிலையம்.

மின்னணு ஆளுமையின் கீழ் போலீஸ் ஸ்டேஷன்கள்.

நீதிமன்றங்களில் தமிழ்மொழி.

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை.

மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்.

‘ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக்குனிவில் இருந்து தமிழகத்தை மீட்போம்’ - முந்தைய தி.மு.க ஆட்சி வைத்துவிட்டுப் போன கடனுக்கு 2011 தேர்தல் அறிக்கையில் சொன்ன விளக்கம் இது. ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இப்போது இரண்டு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.

தடையில்லா மின்சாரத்துக்கு சிறப்புத் திட்டம்.

‘Free to Air DTH சேவைகள் விரைவாக வழங்க நடவடிக்கை.

வீடுகளில் திருட்டு, கொள்ளைகளைத் தடுக்க இளைஞர் சிறப்புப் படைகள். 

பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க மாணவர் சிறப்புப் படை.

மீனவர் பாதுகாப்புப் படை.

விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

முதல் தகவல் அறிக்கையை உடனடியாக பதிவுசெய்தல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்