“மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்!”

சென்னையில் ‘நம் விரல்... நம் குரல்!’

ந்திய தேர்தல் ஆணையம், விகடன் குழுமம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளிலும் பொது அரங்குகளிலும் நடத்தப்பட்டு வந்த ‘நம் விரல்... நம் குரல்’ தேர்தல் விழிப்பு உணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசாவில் இளைஞர்களின் விவாத நிகழ்ச்சியாக நடந்தது. ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதித் தேர்தல் அதிகாரிகள் சந்திரசேகர், பாலசந்தர் ஆகியோர் கலந்துகொண்டு வாக்குப்பதிவு குறித்த செயல் முறைகளை விளக்கினர். ஈக்யூடாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவன ஊழியர்கள் தேர்தல் விழிப்பு உணர்வு உறுதிமொழி ஏற்றனர். வாக்காளர் விழிப்பு உணர்வு இயக்கத்தை ஸ்பென்சர் பிளாசா தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தேவா: ‘‘இந்தத் தடவைதான் முதன்முதலாக ஓட்டு போடப் போகிறேன். தமிழகத்தின் தலையெழுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய இந்தத் தேர்தல் நடக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் ஓட்டு போட வேண்டும். 100 சதவிகிதம் எல்லோரும் வாக்கைப் பதிவுசெய்துவிட்டால் கள்ள ஓட்டுக்கு இடமில்லை. பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது கேவலம். ஓட்டு போட பணம் வாங்கினோம் என்றால் ஆட்சியில் அமர்ந்து மந்திரிகள் ஆன பிறகு ஆட்சியாளர்கள் கொள்ளை அடிப்பார்கள். பால் மின்கட்டணத்தை உயர்த்துவார்கள். நாம், கேள்வி கேட்க முடியாது. நல்லவர் ஒருவரை நமது எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுப்போம். பணக்காரர்கள், நடுத்தரவர்க்கத்தினரைவிட ஏழை எளிய மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவருக்கு இந்தத் தேர்தலில் நான் ஓட்டு போடுவேன். இலவசம் தருகிறார்கள் என்றால் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். இலவசம் எதையும் வாங்கக் கூடாது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்