மிஸ்டர் கழுகு: ‘பெட்’ கட்டு... துட்டு அள்ளு!

சூடானது தேர்தல் சூதாட்டம்...

‘‘தமிழகத்தின் புது ‘ட்ரெண்ட்’ என்ன தெரியுமா?’’ என்று கேட்டபடி, பரபரப்பாக வந்து அமர்ந்தார் கழுகார்.

“நூதன முறையில் ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்வதைத்தானே சொல்கிறீர்?’’

“அதுதான் பழைய ட்ரெண்ட் ஆகிவிட்டதே? அதைப் பற்றியும் இருக்கிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன். நான் சொல்லவந்தது, கோடியில் புரளும் புதிய பிசினஸ் பற்றி. ஐ.பி.எல் சூதாட்டம் நினை​விருக்கிறதா? சென்னை சௌகார்பேட்டையில் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டதில் தொடங்கி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைதுவரை போய்; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களின் பெயர்கள் டேமேஜ் ஆகி; இந்தியா சிமென்ட் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் தலைமறைவாக சுற்றியது என பரபரப்பான க்ரைம் சினிமாவைப்போல் காட்சிகள் நகர்ந்தன அல்லவா? அதற்குக் காரணகர்த்தாவாக இருந்த அதே கும்பல்... அதே பாணியில், மீண்டும் தமிழகத்தில் களம் இறங்கி உள்ளது. இந்த முறை அவர்களின் சூதாட்டக் களம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்” என்றார்.

‘‘இதிலுமா?’’

‘‘ஐ.பி.எல் சூதாட்டம் சென்னையில் நடந்து, அதில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தத் தடை இன்னும் விலகவில்லை. அதனால், இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி இடம்பெறவில்லை. சென்னை அணி இடம்பெறாமல் போனதால், சூதாட்ட பிசினஸுக்கு இங்கே களம் கிடைக்காமல், சூதாடிகளும், புக்கிகளும், அவர்களை ஆட்டுவிக்கும் பெட்டிங் கம்பெனிகளும் அல்லாடிக்கொண்​டிருந்தனர். அவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துகொண்டிருக்கிறது தமிழக சட்டமன்றத் தேர்தல். அதனால், தற்போது தேர்தலை வைத்து பல கோடி ரூபாய்கள் ‘பெட்டிங்’கில் சுற்றிக் கொண்டிருக்கிறது.’’

‘‘இதில் என்ன ‘பெட்’?’’

‘‘தேர்தல் ரிசல்ட்தான் ‘பெட்’. தேர்தல் ரிசல்ட் வரும் நாள்தான் ‘க்ளைமாக்ஸ்’ தேதி. மே 16 நெருங்க நெருங்க, இந்தச் சூதாட்டத்தில் த்ரில் கூடிக்கொண்டே போகிறது. தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா? அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளுமா? என்பதுதான் பெட். அதுபோல, குறிப்பிட்ட தொகுதியில், யார் ஜெயிப்பார்கள்? நட்சத்திர வேட்பாளர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று வெரைட்டிகளும் இருக்கின்றன. அதற்கான வி.ஐ.பி வேட்பாளர்களின் பெயர் லிஸ்ட்களையும் வாட்ஸ்அப்பில் சுற்றவிட்டுள்ளனர். இந்த முறை இவர்களின் சங்கேத வார்த்தை ‘பாஸ்போர்ட்’. இதற்காகத் தனியாக வாட்ஸ்அப் குரூப்களை ஆரம்பித்து, இந்த நெட்வொர்க்கில் இருப்பவர்கள், பாஸ்போர்ட் என்ற வார்த்தையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் தெளிவான பொருள் என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. அதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.’’

‘‘என்ன முறையில் நடக்கிறது?’’

‘‘பெட்டிங் கம்பெனிகள், புக்கிகள், ஏஜென்ட்கள், சூதாடிகள் என்பதுதான் இதன் வரிசைக்கிரமம். பெட்டிங் கம்பெனிகளுக்கு டெல்லியும் மும்பையும்தான் தலைமையிடம். சென்னையில் இவர்களுக்காக ஏஜென்ட்களும் புக்கிகளும் இருக்கின்றனர். எப்போதும் ஆன் லைனில் இருக்கும் புக்கிகளுக்குக் கீழ், ஏஜென்ட்கள் செயல்படுவார்கள். சென்னையில் மட்டும் ஏஜென்ட்களையும் புக்கிகளையும் சேர்த்து பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்றால், சூதாடிகள் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள் என்று நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். ஒருமுறை சூதாடியவர்களால், மீண்டும் சூதாடாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு எதிலாவது பெட் கட்டியே தீர வேண்டும். அப்படிப்பட்டவர்கள் ஏஜென்ட்களை அணுகுவார்கள். ஏஜென்ட்களை ஒருங்கிணைக்கும் புக்கி, அவர்களிடம் ஒரு பட்டியலைக் கொடுப்பார். அதில் வரிசையாக எந்தக் கட்சி வெற்றிபெறும் அல்லது தோற்றுப்போகும், வி.ஐ.பி வேட்பாளர்கள் எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பார்கள்? எந்தத் தொகுதியில் எந்த வேட்பாளர் ஜெயிப்பார் என்பதில் ஆரம்பித்து பெட்டிங் விவரங்களும், அவை ஒவ்​வொன்றுக்குமான தொகையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதைச்  சூதாடிகளிடம் காண்பித்து, அவர்கள் விருப்பப்பட்டதை தேர்வுசெய்யச் சொல்வார்கள். அதற்கான பணம் வசூல் செய்யப்படும். அப்படிக் கிடைத்த மொத்தத் தொகையும் புக்கிகள் மூலமாக கம்பெனிக்குப் போகும். அதேபோல், மேட்ச் முடிந்ததும், கம்பெனி புக்கியிடம் பணம் தரும். புக்கி ஏஜென்ட்கள் வழியே பெட் கட்டியவர்களுக்குப் போய்விடும். 10 லட்சம் பெட்டிங் தொகை வசூலித்துக் கொடுத்தால், ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் ரூபாய் கமிஷன் தொகை ஏஜென்டுக்குக் கிடைக்கும். கடைசி ஏஜென்டுக்கே இவ்வளவு தொகை என்றால், பல ஏஜென்ட்களிடம் வசூல்செய்து கொடுக்கும் புக்கிக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.’’

‘‘இந்த பெட்டிங் கம்பெனிகள், ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்டத்தை மாற்ற, வீரர்களுக்கு விலை கொடுத்தது... தேர்தலில் அதுபோல் ஏதாவது செய்ய முயற்சி நடக்கிறதா?’’

‘‘பெட்டிங் கம்பெனிகள் அப்படி எதையாவது நடத்தாமல் இருப்பார்களா என்ன? சூதாட்டம் தொடங்கியதுமே, பணம் கட்டியவர்களில் அதிகமானோர், அ.தி.மு.க ஜெயிக்கும் என்று பணம் கட்டி இருந்தனர். அப்போது ட்ரண்டும் அப்படித்தான் இருந்தது. சூதாடிகள் நிறையப்பேர் எதில் பணம் கட்டுகிறார்களோ, அதற்கு நேர்மாறாக ரிசல்ட் வந்தால்தான் பெட்டிங் கம்பெனிக்கு லாபம். சூதாடிகள் கட்டியது போலவே ரிசல்ட் வந்தால், அவர்களுக்குப் பணத்தை இரண்டு மடங்காக திரும்பித்தர வேண்டும். அது கம்பெனிக்கு நஷ்டம். அதில் பயந்துபோன பெட்டிங் கம்பெனிகள், உடனடியாக சுதாரித்துக்கொண்டு, தி.மு.க ஜெயிக்கும் என்று பணம் கட்டுபவர்களுக்குக் கூடுதல் சலுகை அளித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்