கழுகார் பதில்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

இவ்வளவு கேலி கிண்டல் செய்த பிறகும் இன்னும் ஜெயலலிதா செல்லும் கார் டயரை வணங்குகிறார்களே?

 பணம் ஐயா, பணம்... பதவி ஐயா, பதவி... சொகுசு ஐயா, சொகுசு... சும்மா கிடைக்குமா? அரைமணி நேரம் குனிந்து கூழைக் கும்பிடு போட்டுவிட்டு ஐந்து ஆண்டுகள் ஹாயா இருப்பது என்றால், கசக்கவா போகிறது? அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ அரைமணி நேரம் வெயிலில் நிற்கிறார்கள். அம்மா வந்து போனதும் என்ன செய்கிறார்கள் என்பதை அம்மா கவனிப்பது இல்லையே? இவர்கள் நடத்திய லீலைகளை இங்கே எழுத முடியாது. அதனால் பாவம் இவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அம்மா இவர்களை அடிமைகளாக நடத்துகிறார், வெயிலில் காய்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். அதிகமாகக் குனிந்து கும்பிடுபவர்களது சொத்துக் கணக்கைப் பாருங்கள். பினாமிகளின் எண்ணிக்கையைத் தேடுங்கள். எத்தனை சினிமாக்களுக்கு இவர்கள் ஃபைனான்ஸ் என்பதைக் கணக்கிடுங்கள். இவர்கள் ஏன் கும்பிடுகிறார்கள் என்று தெரியும். இவை எல்லாமே ஜெயலலிதாவுக்கும் தெரியும். அதனால்தான் அவரும் வதைக்கிறார். ‘அதிகாரத்தை அனுபவிக்கிறாய் அல்லவா, அரைமணி நேரமாவது அவஸ்தைப்படு’ என்கிறார். பழ.கருப்பையா அழகாகச் சொன்னார்: ‘‘அடுத்தவர்களின் பேராசை மீது அரசியல் நடத்துகிறார் ஜெயலலிதா” என்று!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்